New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/EARTH-DAY-THAILAND-monks-candles-1200.jpg)
பலர் இந்த நிகழ்ச்சியை வரவேற்றாலும் இத்தனை மெழுகுவர்த்திகளை ஏற்றுவதும் சுற்றுசூழலுக்கு தீங்கு தரும் என்று கூறி விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.
Thai monks light 330000 candles : வெள்ளிக்கிழமை அன்று புவி தினத்தை முன்னிட்டு தாய்லாந்து நாட்டில் உள்ள புத்த துறவிகள் 3,30,000 மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து உலகை காக்க புதிய வேண்டுகோளை விடுத்துள்ளனர். அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கின்னஸ் உலக சாதைனையை புரிய வாட் தம்மகயா புத்த கோவிலில் உள்ள 78 ஏக்கர் பகுதியில் எரியும் மெழுகுவர்த்திகளை உலகிற்கு ஒரு நல்ல செய்தியை குறிப்பிட்டுள்ளனர். உலகத்தை பிரதிபலிக்கும் வரைபடத்தை உருவாக்கி அதில் புத்த துறவி ஒருவர் தியானம் செய்வது போன்று மெழுகுவர்த்திகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உலகை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற சித்தாந்தத்தை மனதில் கொண்டு இது உருவாக்கப்பட்டது என்று கோவிலின் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக கிட்டத்தட்ட 3 லட்சம் புத்த துறவிகள் ஆன்லைன் மூலமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பலர் இந்த நிகழ்ச்சியை வரவேற்றாலும் இத்தனை மெழுகுவர்த்திகளை ஏற்றுவதும் சுற்றுசூழலுக்கு தீங்கு தரும் என்று கூறி விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.