அண்ணே, அந்த பக்கம்தானே போறீங்க, லிப்ட் கொடுங்க…: வைரலாகும் யானையின் வீடியோ..

Thailand elephant : தாய்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், யானை ஒன்று, ஓடும் கார் மீது அமரும் வகையிலான வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By: Updated: December 5, 2019, 08:09:22 PM

தாய்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், யானை ஒன்று, ஓடும் கார் மீது அமரும் வகையிலான வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ளது கோவ் யாய் தேசிய உயிரியல் பூங்கா. தாய்லாந்து என்றாலே யானைகள் பிரசித்தம் என்பதால், இந்த பூங்காவிலும் அரிய வகை யானைகள் உள்ளன. இதனை காண்பதற்காக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த பூங்காவிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கோடை மற்றும் குளிர் கால துவக்கம் மற்றும் முடிவு காலங்களில், பூங்காவில் உள்ளே அமைந்துள்ள சாலையில் அதிகளவிலான யானைகளை காணலாம். சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி, யானைகளை போட்டோ எடுத்து மகிழ்வர்.

பூங்காவில் உள் சாலையில் காரில் சுற்றுலாப்பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய யானை சாலையை கடந்து கொண்டிருந்தது. டிரைவர் காரை, யானையின் அருகில் போய் காரை நிறுத்தியுள்ளார். யானை, அந்த சைடு தானே போறீங்க….கொஞ்சம் லிப்டு கொடுங்க என்று காரில் ஏற முற்பட்டது. காரின் மேற்பகுதியில் யானை அனசாயமாக உட்கார்ந்ததில், காரின் முன்பக்க கண்ணாடி, மேற்பகுதி, எரிபொருள் டேங்க் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, காரின் உள்ளே இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. டிரைவர் உடனே சுதாரித்துக்கொண்டு காரை வேகமாக செலுத்தி அந்த இடத்தை விட்டு புறப்பட்டார். இந்த நிகழ்வை, மற்ற சுற்றுலாபயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிகழ்வின் போட்டோக்கள், வனஉயிரியல் பூங்காவின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அந்த பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்த யானை 35 வயதான துவா யானை. சுற்றுலாப்பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற யானை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகள் சாலையை கடக்கும் சமயத்தில், சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட வேண்டும். யானை அருகில் வந்துவிட்டால், காரை பின்னோக்கி இயக்க வேண்டும். வாகனங்களை சாலையில் நிறுத்தி போட்டோக்களை எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Thailand park elephant tries to sit on moving car with tourists inside it

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X