அமெரிக்க தேர்தல் 2024: வெற்றியாளரைக் கணித்த தாய்லாந்து நீர்யானைக் குட்டி; வைரல் வீடியோ

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலையில், ஒரு நீர்யானைக் குட்டி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என கணித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலையில், ஒரு நீர்யானைக் குட்டி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என கணித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hippo us

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலையில், ஒரு நீர்யானைக் குட்டி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என கணித்துள்ள வீடியோ

அமெரிக்க அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலையில், ஒரு நீர்யானைக் குட்டி டொனால்ட் டிரம்பை  வெற்றி பெறுவார் என கணித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Thailand’s viral hippo ‘predicts’ 2024 US election winner; zoo posts video

தாய்லாந்தின் பிரியமான பிக்மி குள்ள வகை நீர்யானைக் குட்டி அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை "கணித்து" இணையத்தில் பிரபலமாகி உள்ளது. இந்த நீர்யானைக் குட்டி பராமரிக்கப்படும் மிருகக்காட்சிசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு எளிமையான நிகழ்வில், வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இரண்டு போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய குள்ள வகை நீர்யானை அழைக்கப்பட்டது.

இந்த தேர்வு இரண்டு வண்ணமயமான பூசணிக்காயின் வடிவத்தில் வைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் உள்ளூர் எழுத்தில் ஒரு வேட்பாளரின் பெயருடன் செதுக்கப்பட்டது. பார்வையாளர்களின் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில், அந்த நீர்யானைக் குட்டி "டிரம்ப்" எனக் குறிக்கப்பட்ட பூசணிக்காயை நோக்கிச் சென்று தனது சிற்றுண்டி சாப்பிடத் தொடங்கியது. கமலா ஹாரிஸ் பூசணிக்காயை அருகில் உள்ள ஒரு பெரிய நீர்யானைக்கு விட்டுச் சென்றது.

Advertisment
Advertisements

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியாளரைக் கணித்த நீர்யானைக் குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ​​அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப்பை தேர்வு செய்த நீர்யானைக் குட்டியின் "கணிப்பு" உண்மையாகுமா என உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பாருங்கள்: 

இந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்த ஒரு பயனர், "இப்போ அதிர்ஷ்டத்தை சொல்பவர்" என்று எழுதினார். மற்றொரு பயனர்,  “இது வேடிக்கைக்காக என்று எனக்குத் தெரியும், தீவிர இடதுசாரிகள் மட்டுமே இதற்காக கோபப்படுவார்கள், ஆனால் இந்த குள்ள வகை நீர்யானை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சில பயனர்கள் பெரிய நீர்யானை கமலாவின் பெயரைக் கொண்ட பூசணிக்காயைத் தேர்ந்தெடுத்ததாகவும்,  குள்ள நீர்யானைக்கு தேர்வு செய்ய ட்ரம்பைத் தவிர வேறு வழியில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

ஒரு நபர் எழுதினார்,  “ஒருவேளை முழு எடிட் செய்யப்படாத வீடியோவைக் காட்டலாம், இதனுடைய அம்மா  கமலாவைத் தேர்ந்தெடுத்ததைக் காட்டலாம், அதே நேரத்தில் நீர்யானைக் குட்டிக்கு டிரப்தான் கிடைத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீர்யானைக் குட்டியின் கணிப்பு தேர்தல் உற்சாகத்தில் ஒரு விளையாட்டுத்தனமான வேடிக்கையாக இருக்கலாம், ஆனால், வேட்பாளர்கள் கடுமையான, போட்டியில் இருப்பதால் இது போன்ற வீடியோக்கள் வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: