/tamil-ie/media/media_files/uploads/2020/05/image-3.jpg)
Dhoni in yellove: கொரோனாவால், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ் தோனி, சென்னையில் நடைபெற்ற தனது ஐ.பி.எல் பயிற்சி முகாமை முடித்து விட்டு ராஞ்சியில் உள்ள வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் கணக்கில், எம்.எஸ். தனது பண்ணை வீட்டில் தோனி, சாக்ஷி சிங், மகள் ஷிவா ஆகியோர் தங்கள் செல்ல நாய் சாம் உடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளது.
Thala Dhoni in #yellove, dot. #WhistlePodu ???????? VC: @SaakshiSRawatpic.twitter.com/z4FrGumlxC
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2020
வீடியோவில், சாம் இந்த கேட்ச் பிடி என்று கூறி தோனி ஒரு டென்னிஸ் பந்தை வீசுகிறார். ஆனால், சாம் தோனியின் பேச்சை சுத்தமாக கேட்கவில்லை. அப்போது, "பார், நான் இருக்கும் வரை சாம் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்" என்று சாக்ஷி தோனியை நக்கலடிக்கிறார்.
ஆனால், சாம் தோனியின் மனைவியான சாக்ஷி கூறும் அன்புக் கட்டளைகளை அப்படியே ஏற்கிறது. முதலில் சாக்ஷி கூறியபடியே உட்காருகிறது. உயரத்தில் தூங்கி எறிந்த பந்தை கடினப்பட்டாவது தாவி பிடிக்கிறது.
என்னடா... இது தல தோனிக்கு வந்த நிலைமை என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கர்ஜிக்கின்றனர். சாமுக்கு கேட்ச் பிடிப்பதை கற்றுக் கொடுத்ததை விட, தோனியின் பேச்சைக் கேட்க கூடாது என்ற பயற்சி அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதோ? என்றும் வினவுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.