/tamil-ie/media/media_files/uploads/2020/01/New-Project-2020-01-07T153711.530.jpg)
Thamizh Thaai Vaazhthu song wrong singing, Thamizh Thaai Vaazhthu song wrong singing a politician, tamil thai valthu song, Thamizh Thaai Vaazhthu song, kanyakumari district, pechiparai puchayat, tamil thai valthu wrongly singing viral video, viral video
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊராட்சி மன்ற கூட்டம் ஒன்றில் அரசியல்வாதி ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்தை தப்புத்தப்பாகப் பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகிவருகிறது.
பொதுவாக தமிழக அரசியல் கூட்டங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது என்பது மரபாக இருந்துவருகிறது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நடைமுறையில் இருந்துவருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்தில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தப்புத்தப்பாக பாடியுள்ளார்.
வீட்டுக்கு போயி
தமிழ்த்தாய் வாழ்த்து...
100 தடவை படிச்சு
எழுதிக்கிட்டு வாங்க???????? pic.twitter.com/m2cMlKQZLB— ☕️ டீ இன்னும் வரலை ???? (@Raajavijeyan) January 7, 2020
அப்போது அங்கிருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் பலரும், ஒரு அரசியல்வாதிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கூட சரியாகத் தெரியவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமித்தாய் வாழ்த்துப் பாடலை இப்படியா கொலை செய்வது என்று ஒருவர் தனது கோபத்தை இந்த அரசியல் பிரமுகர்கள் மீது வெளிப்படுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நல்லா படித்த மக்கள் உள்ள ஊர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒரு ஸ்கூல் பிள்ளை கூட கிடைக்கவில்லையா? எல்லாந்தெரிஞ்ச மாதிரி பாடுற அந்த ஆள யாராவது பார்த்த மண்டையில ஒரு கொட்டு வைங்க ???????????? pic.twitter.com/Pf3GAnHQ0V— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) January 7, 2020
மற்றொருவர், கன்னியாகுமரி மாவட்டம் நல்லா படித்த மக்கள் உள்ள ஊர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒரு ஸ்கூல் பிள்ளை கூட கிடைக்கவில்லையா? எல்லாந்தெரிஞ்ச மாதிரி பாடுற அந்த ஆள யாராவது பார்த்த மண்டையில ஒரு கொட்டு வைங்க கடிந்துகொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.