மனிதனுக்கு மட்டுமல்லாமல் வனத்தின் பலம் மிக்கதும் நுண்ணுணர்வு கொண்ட விலங்கான யானைகள் உள்பட அனைத்து விலங்கினத்திலும் பொதுவான ஒரு உணர்வு உண்டு என்றால், அது தாய்ப்பாசம். பறவைகளைத் துரத்தி விளையாடிய யானைக்குட்டி ஒன்று எப்படி தாயின் அரவணைப்பைத் தேடி ஓடுகிறது என்ற வீடியோ வைரலாகி வருகிறது.
விலங்கினங்களில் தாய் அன்பும் தாய்ப்பாசமும் பொதுவானதாக உள்ளது. வனத்தின் பலம் மிக்க விலங்கான யானைகளே பெருங்காடுகளை உருவாக்குகின்றன என்று சூழலியாளர்கள் கூறுகின்றனர். விலங்கின ஆய்வாளர்கள் யானைகள் மிகவும் நுண்ணுணர்வு கொண்டவைகள் என்கின்றனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் என்ற கதையில் யானைகளின் நுண்ணுணர்வைப் பற்றியும் யானைகள் மனிதர்களால் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதையும் எழுதியுள்ளார்.
இத்தகைய யானைகள், வனங்களில் ஒரு குழுவாக வலம் வருவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு. யானைக் குட்டிகள் குழந்தைகளைப் போல வேடிக்கையாக விளையாடுபவை. விளையாடும்போது விழுந்துவிட்டால் யானைக்குட்டிக்கும் வலிக்கும்தானே. அப்போது யானைக்குட்டியும் குழந்தைகளைப் போல அம்மாவைத் தேடி ஓடுகின்றன. அப்படி ஒரு வீடியோ வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா ஐ.எஃப்.எஸ். தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
All kids have a full time job.
That is called PLAY....
And for all, mummy is the ultimate pain killers ???? pic.twitter.com/iFJEPvprCA
— Susanta Nanda IFS (@susantananda3) April 11, 2020
சுசந்தா நந்தா, “எல்லா குழந்தைகளின் முழு நேர வேலை விளையாடுவதுதான். எல்லாவற்றுக்கும் வலி நிவாரணி அம்மாதான்” என்று குறிப்பிட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு குட்டியா யானை பறவைகளைத் துரத்தி விளையாடுகிறது. பறவைகளும் சுழன்று சுழன்று சுற்றி வருகிறது. யானைக்குட்டியும் விடாமல் சுற்றி சுற்றி துரத்துகிறது. அப்போது யானைக்குட்டி திடீரென தடுமாறி கிழே விழுந்துவிடுகிறது. யானைக்குட்டிக்கு வலி ஏற்படவே அது உடனடியாக அருகே இருக்கும் அம்மாவிடம் ஓடி தஞ்சமடைகிறது. அந்த தாய் யானையும் குட்டி யானையை அரவனைத்துக்கொள்கிறது.
இந்த வீடியோவை 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். யானைக்குட்டி சுற்றி சுற்றி விளையாடுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்றும் இந்த வீடியோவை பகிர்ந்ததற்கு நன்றி என்றும் டுவிட்டர் பயனர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.