Kerala girl viral video : தேர்விற்கு நேரமானதால், குதிரையை பள்ளி மாணவி ஒருவர் அசுர வேகத்தில் செலுத்தும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, சாலையில் குதிரையை அசுர வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார். இதை சாலையில் சென்ற பலரும் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவி குறித்து விபரம் சேகரிக்கப்பட்டது.
அவர் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி என்றும் தேர்விற்கு நேரமாகிவிட்டதால், குதிரையில் இத்தனை வேகத்தில் அவர் சென்றதாக தெரியவந்தது. நன்கு பயிற்சி பெற்றவர் கூட இவ்வளவு வேகமாக சாலையில் குதிரையை இயக்க திணறும் நிலையில், பள்ளி மாணவி ஒருவர் இவ்வளவு வேகத்தில் குதிரையை இயக்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படங்களில் அசகாய சூரர்களாக விளங்கும் நடிகர், நடிகைகள், டூப் வைத்தோ அல்லது பொம்மை குதிரைகளை ஓட்டியோ, குதிரை ஓட்டும் காட்சிகளில் நடித்துவரும் நிலையில், நிஜத்தில் இத்தனை வேகத்தில் குதிரை ஓட்டிய சிறுமியே நிஜ வீராங்கனை என்று சமூகவலைதளங்களில் மக்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.