வீடியோ: அடடே... நம்ம ஊரில் இப்படியொரு அரசு பஸ் கண்டக்டரா?

ஒரு அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளிடம் கனிவுடன் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவருகிறது. இதன் மூலம் அரசுப் பேருந்து நடத்துனர்கள்...

ஒரு அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளிடம் கனிவுடன் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவருகிறது. இதன் மூலம் அரசுப் பேருந்து நடத்துனர்கள் என்றாலே பயணிகளிடம் எரிந்து விழுபவர்கள் என்ற பார்வையை இந்த கனிவான நடத்துனர் மாற்றியிருக்கிறார்.

பொதுவாக அரசுப் பேருந்து நடத்துனர்கள் என்றாலே பயணிகளிடம் சில்லறைகளுக்காக எரிந்து விழுவதை பலரும் பார்த்திருப்போம் சிலர் அத்தகைய அர்ச்சனைகளை அனுபவித்தும் இருப்போம். இதனாலேயே, அரசுப் பேர்ந்து நடத்துனர்கள் மீது ஒருவித கோபம் பயணிகளிடம் இருப்பதை பார்க்க முடியும்.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

இப்படியான சூழலில், ஒரு அரசுப் பேருந்து நடத்துனர் சிவசண்முகம் என்பவர் பேருந்தில் பயணிகளிடம் கனிவாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அரசுப் பேருந்து நடத்துனர் சிவசண்முகம் என்பவர், தான் பணிபுரியும் பேருந்து புறப்படுவதற்கு முன்பு,

உங்களோடு பணியபுரிய எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. தமிழ்நாடு அரசு நமக்கு ஒரு புதிய பேருந்தை கொடுத்திருக்கிறது. அந்த பேருந்தை சுத்தமாக வைப்பதிலும் பழுது ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது.

நடத்துனர் பேருந்தில் ஏறியவுடன், பேருந்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறாரே என்று சஞ்சலப்படாதீர்கள். நீங்கள் சாப்பிடுகிற பொருட்களின் காகிதம், போன்றவற்றை வெளியே போட்டாலேபோதுமானது.

நாம் ஒரு 200 கிலோ மீட்டர் மேல், தொடர்ச்சியாக பயணம் செய்யப்போகிறோம். பயணத்தின்போது ஒருசிலருக்கு அசௌகரியமாக இயற்கை உபாதைகள் மற்றும் வாந்தி வருவதுபோல இருக்கலாம். அப்படி ஏதாவது என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் பேருந்தை நிறுத்தச் சொல்கிறேன். அதற்கு புளிப்பு மிட்டாய் தருகிறேன். கவர் தருகிறேன். அதனால், தயங்காமல் சொல்லுங்கள். நம்முடைய பேருந்தை நாம்தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பயணக்கட்டணத்தை தெரிந்துகொள்ளுங்கள், இந்தப் பேருந்து வாடிப்பட்டி வழியாகத்தான் செல்லும். பேருந்து கட்டணம், வாடிப்பட்டிக்கு ரூ.22.00, திண்டுக்கல் பைபாஸ் ரூ.58.00, ஒட்டன்சந்திரம் ரூ.82.00, தாராபுரம் ரூ.115.00, பல்லடம் ரூ.146.00, கோவை ரூ.171.00 உரிய சில்லறை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பேருந்தில் பலதரப்பட்ட மக்கள் பயணம் செய்வீர்கள். ஒவ்வொருத்தருக்கும் பல விசேஷங்களுக்காக செல்வீர்கள். உங்களுடைய பயணம் வெற்றிகரமாக சிறப்பானதாக அமைய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பிலும், இந்த பேருந்து ஓட்டுனர் ஓட்டுநர் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறுகிறார்.

நடந்துனரின் பேச்சுக்கு பேருந்தில் இருப்பவர்கள் கைத்தட்டி பாராட்டுகிறார்கள்.

நடத்துனர் சிவசண்முகம் பேசியரை பேருந்தில் அமர்ந்திருந்த ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர வைரல் ஆனது.

பொதுவாக, சில்லறைக்களுக்காக பயணிகளிடம் எரிந்துவிழுந்து கடுமையாக நடந்துகொள்ளும் நடத்துனர்களிடையே நடத்துனரின் இந்த கனிவான பேச்சு வரவேற்பை பெற்றுள்ளது.


நடத்துனர் சிவசண்முகம் பேசிய வீடியோவை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.


அதே போல, திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா இந்த வீடியோ பகிர்ந்து நடத்துனர் சிவசண்முகத்தையும் ஓட்டுநர் சதாசிவத்தையும் பாராட்டியுள்ளார். இதனால், பயணிகளிடம் கனிவுடன் பேசிய நடத்துனர் சிவசண்முகம் மேலும் கவனத்தைப் பெற்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close