ரவுடி பேபியை விடுங்க... கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு

என் மகனை ராஜா போல வளர்க்க வேண்டும் என்று கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை ராஜாவாகவே வளர்க்கப்படுகிறது.

குழந்தை பிறந்தாலே ஒரு வருடம் போட்டோ எடுக்காமல் இருப்பது நமது ஊரின் பழமையான வழக்கம். ஆனால் அதெல்லாம் இப்போது இங்கேயும் மாறிப்போக, குழந்தை பிறக்கும் தருணம், குழந்தை வளரும் ஒவ்வொரு நொடியும் புகைப்படங்களாக எடுத்து அழகு பார்க்கின்றனர் குடும்பத்தினர்.

கொரியா பேபி ராஜா :

அதிலும் சில பெற்றோர்கள் குழந்தை பிறந்து 6 மாதம் ஆன பிறகு ஒரு குட்டி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதௌ டிரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் ஓவர்டேக் செய்துள்ளது “பேபி ராஜா” புகைப்படம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தை சேர்ந்த ஒரு பெண் தனது டுவிட்டர் புகைப்படத்தில் தனது குடும்பத்தில் புதிதாக பிறந்த குழந்தை புகைப்படம் ஒன்று பகிர்ந்தார். அந்த புகைப்படம் கண் இமைக்கும் நொடியில் பலரின் கவனத்தையும் இழுத்தது. காரணம், அந்த குழந்தைக்கு போடப்பட்டிருந்த ராஜா  வேஷம் தான்.

பிறந்து 100 நாட்கள் ஆனதை கொண்டாடும் வகையில், அந்த குழந்தையை கொரியா அரசன் போல வேடம் போட்டு, ஒரு குட்டி இருக்கையில் அமர்த்தி முன்னால் இனிப்புகளை சீர் வரிசையாக வைத்து கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் குழந்தையின் அழகில் மெய் மறந்து, தனது டைம்லைனிலும் பகிர்ந்து வருகின்றனர். பலரும் அக்குழந்தையை வாழ்த்தி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close