காலநிலை மாற்றம், வெப்பமயமாதல், தொழில்மயமாக்கல், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, உலகிலுள்ள பல உயிரினங்கள் இன்று அழிவை சந்தித்து வருகின்றன. அதன் ஆபத்தை நாம் உணரும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. உலகின் கடைசி வட ஆண் வெள்ளை காண்டாமிருகத்தின் புகைப்படம்தான் அது. இது, காண்டாமிருகத்தின் ஒரு இனமாகும்.
விலங்குகள் ஆர்வலர் டானியல் ஸ்க்னீடர் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த காண்டாமிருகத்தின் புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், “அழிவு என்பது எப்படியிருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? இதுதான் உலகின் கடைசி வட ஆண் வெள்ளை காண்டாமிருகம். இதுதான் கடைசி”, என பதிவிட்டிருந்தார்.
இந்த காண்டாமிருகம் கென்யாவில் உள்ள சரணாலயத்தில் உள்ளது. இதனுடன் இரண்டு பெண் வட வெள்ளை காண்டாமிருகங்கள் உள்ளன. இந்த உயிரினம் குறித்து பலரும் தங்கள் கவலையை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.