viral video: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதுவே உலகத்தில் மிகப் பெரிய பாம்பு வீட்டுக்குள் புகுந்தால் என்ன செய்வீர்கள்? உலகின் மிகப்பெரிய மலைப் பாம்புகளில் ஒன்று ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பிரமிக்க வைத்திருக்கிறது.
பாம்புகளைப் பற்றி உலகம் முழுவதும் நிறைய கதைகள் இருக்கிறது. மனிதர்களுக்கு பாம்பு மீது எல்லா காலத்திலும் எப்போதும் ஒரு அச்சம் இருந்து வருகிறது. பாம்பு கடித்தால் அதன் விஷத்தால் இறந்துவிடுவார்கள் என்கிற அச்சம்கூட இரண்டாம் பட்சம்தான். பாம்பை பார்க்கும்போது, மிகவும் நீளமாக வழவழ என்று பார்த்தவுடன் ஒரு அசூயைத் தோண்றுகிறது இல்லையா? அதுதான் அச்சமாகவும் மாறுகிறது. சாதாரணமான பாம்பை பார்த்தாலே நமக்கு ஒரு அச்சம் ஏற்படுகிறது.
மியான்மரில் ஒரு வீட்டில் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி வீட்டு வரண்டாவுக்குள் நுழைந்த மலைப் பாம்பு வீடியோவைப் பார்க்கும் எவரும் ப்பா… இவ்வளவு பெருசா… என்று மிரண்டு போகிறார்கள்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் உலகில் மிகவும் நீளமான மற்றும் மிகப் பெரிய ஒரு மலைப்பாம்பு வீட்டு வரண்டாவுக்குள் புகுந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் வீட்டுக்கு வெளியே இருந்தே மலைப்பாம்பின் உடலைக் காட்டுகிறார்கள். நீளமான மிகப்பெரிய மலைப் பாம்பு வீட்டு வரண்டா காம்பவுண்ட் சுவரைத் தாண்டி காம்பவுண்ட் வீட்டு வரண்டாவுக்கு இரையைப் பிடிக்க நுழைகிறது. உண்மையில், இவ்வளவு பெரிய மலைப்பாம்பை நீங்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், “ப்பா இவ்வளவு பெருசா” என்று மிரண்டு போகிறார்கள்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் குறிப்பிடுகையில், “உலகில் மிக நீளமான மற்றும் கனமான பாம்புகளில் ஒன்று. ரெட்டிகுலேட்டட் மலைப் பாம்பு மியான்மரில் தனது இரையைப் பிடிப்பதற்காக சுவரில் ஏறுகிறது.
ரெட்டிகுலேட்டட் மலைப் பாம்புகள் கட்டுப்படுத்தி, இரையைப் பிழிந்து கொல்லும். மலைப்பாம்பின் அழுத்தும் சக்தியானது மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு 14 பி.எஸ்.ஐ. கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே நீளமான மற்று மிகப்பெரிய மலைப் பாம்புகளில் ஒன்றை வீடியோவில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“