இயற்கையின் மாயாஜாலம்; அருவியா? மேகக் கூட்டங்களின் ஊர்வலமா? வைரல் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The magic of nature, water falls video viral, இயற்கையின் மாயாஜாலம் வீடியோ, இயற்கை வீடியோ வைரல், mizoram water falls video viral, A procession of clouds viral vidieo, amazing nature video viral

The magic of nature, water falls video viral, இயற்கையின் மாயாஜாலம் வீடியோ, இயற்கை வீடியோ வைரல், mizoram water falls video viral, A procession of clouds viral vidieo, amazing nature video viral

இயற்கையின் வர்ண ஜாலம் வானவில் என்றால், இசை கச்சேரி இடி, மின்னல், மழை, இப்படி இயற்கை தனது மாயாஜாலம் எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் அதிசயிக்கத்தக்க மாயாஜாலம் எல்லா காலத்திலும் மனிதர்கள் கண்டு வியக்கும் ஒன்றாக இருந்துவருகிறது.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

Advertisment

அப்படி இயற்கை நிகழ்த்திக்காட்டிய மாயாஜாலத்தின் புகைப்படமும் வீடியோவும் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ பார்ப்பவர்களை அது மலையிலிருந்து கொட்டும் அருவியா அல்லது மலைப்பகுதியில் பாய்ந்தோடும் ஆறா, அல்லது மேகக்கூட்டங்களின் ஊர்வலமா என்று கண்டறியமுடியாதபடி வியப்பையும் குழப்பத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

மிசோரம் மாநிலத்தின் மலை உச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகி உள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் மேகங்கள் மலைகளின் வழியே கீழே இறங்குவதன் காட்சி. இந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் பலரும் உடனடியாக இதை அருவி என்று நினைக்க வைத்துள்ளது. இயற்கையின் மாயாஜாலத்தை பதிவு செய்துள்ள இந்த வீடியோ பார்ப்பவர்களை வியக்கவைத்துள்ளது.

Social Media Viral Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: