இயற்கையின் மாயாஜாலம்; அருவியா? மேகக் கூட்டங்களின் ஊர்வலமா? வைரல் வீடியோ

இயற்கையின் வர்ண ஜாலம் வானவில் என்றால், இசை கச்சேரி இடி, மின்னல், மழை, இப்படி இயற்கை தனது மாயாஜாலம் எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் அதிசயிக்கத்தக்க மாயாஜாலம் எல்லா காலத்திலும் மனிதர்கள் கண்டு வியக்கும் ஒன்றாக இருந்துவருகிறது. 2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள் அப்படி இயற்கை நிகழ்த்திக்காட்டிய…

By: Updated: December 30, 2019, 07:53:11 PM

இயற்கையின் வர்ண ஜாலம் வானவில் என்றால், இசை கச்சேரி இடி, மின்னல், மழை, இப்படி இயற்கை தனது மாயாஜாலம் எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் அதிசயிக்கத்தக்க மாயாஜாலம் எல்லா காலத்திலும் மனிதர்கள் கண்டு வியக்கும் ஒன்றாக இருந்துவருகிறது.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

அப்படி இயற்கை நிகழ்த்திக்காட்டிய மாயாஜாலத்தின் புகைப்படமும் வீடியோவும் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ பார்ப்பவர்களை அது மலையிலிருந்து கொட்டும் அருவியா அல்லது மலைப்பகுதியில் பாய்ந்தோடும் ஆறா, அல்லது மேகக்கூட்டங்களின் ஊர்வலமா என்று கண்டறியமுடியாதபடி வியப்பையும் குழப்பத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.


மிசோரம் மாநிலத்தின் மலை உச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலு வைரல் ஆகி உள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் மேகங்கள் மலைகளின் வழியே கீழே இறங்குவதன் காட்சி. இந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் பலரும் உடனடியாக இதை அருவி என்று நினைக்க வைத்துள்ளது. இயற்கையின் மாயாஜாலத்தை பதிவு செய்துள்ள இந்த வீடியோ பார்ப்பவர்களை வியக்கவைத்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:The magic of nature water falls or a procession of clouds amazing video go viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X