New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/king-cobera.jpg)
கர்நாடகத்தில் ராஜநாகத்திடம் சிக்கிய இரண்டு நபர்கள் சாதுர்யமாக தப்பிக்கும் கட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமாக வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் எப்போதும் வரவேற்பு அதிகம். அதிலும் காட்டு விலங்குகள் மற்றும் உயிரினங்கள் குறித்து வீடியோவுக்கு தனி மவுசு தான். சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், கடும் விஷம் கொண்ட இரண்டு முல்கா பாம்புகள் சண்டையிட்டுக்கொண்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டனர்.
அந்த வகையில் தற்போது கர்நாடகாவில் ராஜநாகத்தை பிடிக்க சென்ற இரண்டு நபர்கள் நூலிழையில் உயர் தப்பிய வீடியோ சமூக வலைதங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சிவ்மோகா என்ற இடத்தில் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில், மரத்தின் கீழ் ராஜநாகம் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது தெரியவந்தது. இந்த பாம்பை பிடிக்க இரண்டு நபர்கள் முயற்சித்துள்ளனர். அப்போது பாம்பு பிடிப்பவரின் உதவியாளர் பாம்பின் வாலைப் பிடித்து தூக்கியபோது, சீறிய பாம்பு அந்த நபரைக் கடிக்க முயன்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த அநத நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிக்க முயல்கிறார். ஆனால் அவரை விடாத பாம்பு மீண்டு கொத்துவதற்கு வரும்போது, பாம்பின் கழுத்தை பிடித்து அவரின் உதவியாளரின் உதவியுடன் பாம்பை பிடிக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | A reptile expert narrowly escapes being bitten by a Cobra snake while trying to catch the animal
Shivamogga, #Karnataka pic.twitter.com/czTc7Zv7pu
— ANI (@ANI) January 12, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.