Advertisment

ஆளை வளைக்கும் ராட்சத அனகோண்டா: ஒற்றை ஆளாக பிடித்து முத்தமிட்ட நபர் வீடியோ

ராட்சத அனகோண்டாவை ஒற்றை ஆளாக பிடித்த அமெரிக்கர்; பாம்புக்கு முத்தமிடும் வைரல் வீடியோ

author-image
WebDesk
Nov 20, 2023 23:23 IST
New Update
anaconda

ராட்சத அனகோண்டாவை ஒற்றை ஆளாக பிடித்த அமெரிக்கர்; பாம்புக்கு முத்தமிடும் வைரல் வீடியோ

பாம்புகளிலே அளவில் பெரிய அனகோண்டா பாம்பை ஒருவர் ஒற்றை ஆளாக பிடித்து முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதுவும் அனகோண்டா என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அத்தகைய அனகோண்டா பாம்பை உயிரியல் பூங்கா காப்பாளர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புளோரிடா மாநிலம் மியாமியைச் சேர்ந்த உயிரியல் பூங்கா காப்பாளரான மைக் ஹோல்ஸ்டன், வனவிலங்குகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில், சமீபத்தில் அனகோண்டாவை ஒற்றை ஆளாக பிடித்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னை தி ரியல் டார்சான் என்றும் தி கிங் ஆஃப் தி ஜங்கிள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவில், மைக் ஹோல்ஸ்டன் தண்ணீருக்குள் ஊர்ந்து செல்லும் ஒரு பெரிய அனகோண்டாவை லாவகமாக பிடித்து, தண்ணீரை விட்டு வெளியே எடுக்கிறார். பின்னர் அதற்கு முத்தமும் கொடுக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்து, “என்ன ஒரு சாதனை... வெனிசுலாவின் அனகோண்டா என்ற அரக்கனை வெற்றிகரமாகப் பிடித்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 5 நாட்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த பலரும், மைக் ஹோல்ஸ்டனின் துணிச்சலை பாராட்டி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment