New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/09/cat-with-tiger-2025-08-09-22-05-05.jpg)
புலி மீது ஏறி ஊர்வலம் வந்த பூனை... அட, ராஜ களை தெரிகிறதே! வைரல் வீடியோ
பூனையின் குறும்புகளுக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அண்மையில், பூனை செய்த குறும்புதான் இணையத்தை கலக்கி வருகிறது. அதுவும் தனியாக அல்ல, தன் நண்பனான பெரிய புலியையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டது குறும்புக்கார பூனை.

வீடியோவின் ஆரம்பக் காட்சியில், பூனை புலியின் மீது ராஜாவைப் போல அமர்ந்து வீட்டுக்குள் வரும் காட்சிதான் ஹைலைட். வீட்டுக்குள் நுழைந்ததும் இருவரும் சோபாவில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். அடுத்து, திடீரெனப் பசி எடுக்க, சமையலறையை நோக்கி இருவரும் பயணிக்கின்றனர். அங்கேயும் குறும்பு பூனை ஃபிரிட்ஜின் மேல் அமர்ந்து கொள்ள, புலி தன் பெரிய கைகளால் ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கிறது.
உள்ளே இருக்கும் உணவை இருவரும் எடுத்து நிம்மதியாக சாப்பிடும்போதுதான் கதவைத் திறந்து பாட்டி உள்ளே வருகிறார். சோபாவில் அமர்ந்து சாப்பிடும் புலியைக் கண்டதும், பாட்டி பயத்தில் கதறிக்கொண்டு வெளியே ஓடுகிறார். ஆனால், இந்த இரு நண்பர்களுக்கும் எந்தவித சலனமும் இல்லை. இந்த வீடியோ சிசிடிவி காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ jadheshvp என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இப்படி ஒரு கற்பனை சிந்தனை, அழகாக வீடியோவாக மாற்றப்பட்டு, இணையத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பூனையின் குறும்புகள் எப்பவும் ஸ்பெஷல்தான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.