நாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த்! கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்!!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ‘தல’ என்றால் அஜித் அண்ணா மட்டும் தான், தோனி தலையில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோவால் தற்போது பரபரப்பு உருவாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டியின் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்-க்கு வாழ்நாள் முழுவது விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஆல்பம் மற்றும் சினிமாவில் நடிப்பது என்று தன்னுடைய வாழ்க்கையைத் திசை திருப்பியுள்ளார்.

பலரின் பார்வையில் இருந்து மறைந்துள்ள ஸ்ரீசாந்த் எதையாவது செய்து பிரபலத்தைத் தேடிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பிரபலத்தை தேடிக்கொள்ளும் முயற்சியில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அவரை அடுத்த சர்ச்சை கொண்டு சேர்த்துள்ளது.

அந்த வீடியோவில், “தல என்றால் ஒருவர் மட்டும் தான். சென்னை மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒரே ஒரு தல தான் அது அஜித் மட்டும் தான். தோனி தல இல்லை. தோனி நல்ல விளையாட்டு வீரர் தான் ஆனால் அவர் தல இல்லை. என்றுமே ஒரே ஒரு தல அது அஜித் அண்ணா மட்டும் தான்.” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ வெளியானதில் இருந்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. ஒரு புறம் அஜித் ரசிகர்கள் குஷியில் இருந்தாலும் தோனி ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளார்கள். சினிமா உலகிற்கு அஜித் தல என்றால், கிரிக்கெட் உலகத்தில் தோனி தான் தல என்று பலரும் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது இரண்டு தலைகளுமே பிரபலமாக இருந்தாலும், ஸ்ரீசாந்த் செய்த நாரதர் வேலையால், அஜித் மற்றும் தோனி ரசிகர்கள் இணையதளம் முழுவதும் மோதலில் ஏற்பட்டுள்ளனர்.

×Close
×Close