ஓடும் ரயிலில் திருடனின் விபரீத செயல்... பீகாரில் பரபரப்பு சம்பவம் வைரல்!

பீகார் மாநிலம் முங்கர் அருகே பாகல்பூர்-முசாபர்பூர் ஜன்சேவா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த பரபரப்பான சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் முங்கர் அருகே பாகல்பூர்-முசாபர்பூர் ஜன்சேவா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த பரபரப்பான சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
snatching phone

ஓடும் ரயிலில் திருடனின் விபரீத செயல்... பீகாரில் பரபரப்பு சம்பவம் வைரல்!

பீகார் மாநிலம் முங்கர் அருகே பாகல்பூர்-முசாபர்பூர் ஜன்சேவா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த பரபரப்பான சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. திருடன் ஒருவன், தான் திருடிய செல்போனுடன் ரயிலின் படிக்கெட்டில் தொங்கிக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்த காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

Advertisment

சம்பவத்தின் பின்னணி:

வைரல் வீடியோவில், கிழிந்த டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்த இளைஞர், கையில் சட்டையுடன், காயங்களுடன் காணப்படுகிறார். ரயிலில் பயணியின் செல்போனைப் பறித்த அவர் தப்பிக்க முயன்றபோது, வேறு வழியின்றி ஓடும் ரயிலின் படிக்கெட்டில் தொங்கிக்கொண்டுள்ளார். ரயில் வேகமாகச் செல்லும்போது, அந்த நபர் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டிருக்க, பயணிகள் சிலர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பெல்ட்டால் அடித்ததையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

Advertisment
Advertisements

தாக்குபவர்களைப் பார்த்து, "நீங்கள் பின்வாங்கவில்லை என்றால், உங்களையும் இழுத்துச் சென்றுவிடுவேன்" என்று திருடன் எச்சரிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இறுதியில், அவர் மெதுவாக கீழே நழுவி, ரயில் பாதைக்கு அருகிலுள்ள புதர்களில் குதித்து தப்பித்தார். இந்தச் சம்பவம் முழுவதையும் மற்றொரு பயணி படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி, கோபத்தையும் விவாதத்தையும் தூண்டி உள்ளது. ஜமால்பூர் ரயில்வே எஸ்.பி. ரமன் சவுத்ரி, "நாங்கள் இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறோம், வீடியோவில் காணப்படும் நபரை அடையாளம் காண முயற்சிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

X தளத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ, இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சில பயனர்கள் திருடனின் நிலை குறித்து அனுதாபம் தெரிவித்த நிலையில், மற்றவர்கள் இரக்கம் காட்டும் கருத்துக்களைக் கண்டித்தனர். "இப்போது மக்கள் திருடனுக்கு அனுதாபம் காட்டுவார்கள், ஆனால் உங்கள் உடைமைகள், விலை உயர்ந்த போன்கள், வாட்ச்கள், பணம் மற்றும் பல பொருட்கள் திருடப்படும்போது நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இவனது தலைவிதி முடிவு செய்யப்பட்டது" என்று கருத்து தெரிவித்தனர். மற்றொருவர், "ஒருவர் ஒரு மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு ரூ.12,000 மதிப்பிலான மொபைலை வாங்குகிறார், இப்படிப்பட்டவர்கள் ஒரு நொடியில் அதைத் திருடுகிறார்கள். இவர்களுக்கு மனிதநேயம் இல்லை என்றால், இவர்களிடம் யாரும் அனுதாபம் காட்டக்கூடாது" என்று எழுதினார்.

இருப்பினும், அனைவரும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஒரு பயனர், "இரண்டுமே தவறு, ஒருவரின் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் திருடப்படும்போது, அதன் வலியை அவர்கள்தான் அறிவார்கள். ஆனால் நீதிக்கு ஒரு சட்ட அமைப்பு உள்ளது. யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், திருடனின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்" என்று கருத்து தெரிவித்தார்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: