New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a11-1.jpg)
இப்படியொரு நிலையை நாம் முன்பே அறிவதற்காக கடவுள் கொடுத்த வாய்ப்போ என்னவோ, சமூக தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது
ஆச்சர்யத்துடன் பார்ப்பதா, அல்லது இப்படியொரு மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்குமே என்று எண்ணி வருத்தம் கொள்வதா என்று தெரியவில்லை
இப்படியொரு நிலையை நாம் முன்பே அறிவதற்காக கடவுள் கொடுத்த வாய்ப்போ என்னவோ, சமூக தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது
Tamil Viral Video: உலகில் ஏற்பட்டு வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து அனைவரும் படித்திருப்போம். ஏதோ ஒரு ஊடகம் வாயிலாகவோ, சமூக தளங்கள் வாயிலாகவோ தண்ணீர் பஞ்சம் குறித்த தகவல்களை ஆங்காங்கே பார்த்தும் வருகிறோம்.
இந்தியா போன்ற நாட்டில், அதிலும் வளம் மிக்க தமிழகம் போன்ற மாநிலத்தில், அதிலும் குறிப்பாக நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் கூட, பலரது வீடுகளில் தண்ணீர் கேன் வாங்கிக் கொண்டிருப்பது என்பது, முற்றிலும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
கொரோனா குணமாக இந்த அரசியல்வாதி சொல்லும் மருந்தை பாருங்க, அசந்துருவீங்க!
இப்படியொரு நிலையை நாம் முன்பே அறிவதற்காக கடவுள் கொடுத்த வாய்ப்போ என்னவோ, சமூக தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரு ஆணும், பெண்ணும் கையில் தண்ணீர் பாட்டிலோடு நிற்க, அவர்களிடம், அணில் ஒன்று கைகளை ஏந்தி மன்றாடி தண்ணீர் கேட்கிறது. முதலில் அவர்கள் சற்று தயங்க, தொடர்ந்து அவர்களை நோக்கி, கையை ஏந்தியபடியே, தண்ணீர் கேட்டு வர, பிறகு அவர்கள் தண்ணீர் கொடுக்கின்றனர்.
Squirrel asking for water.... pic.twitter.com/JNldkB0aWU
— Susanta Nanda IFS (@susantananda3) July 16, 2020
கிட்டத்தட்ட அந்த பாட்டிலில் மீதம் இருந்த தண்ணீர் அனைத்தையும், அந்த அணில் குடித்துவிட்டது.
இதை நாம் ஆச்சர்யத்துடன் பார்ப்பதா, அல்லது இப்படியொரு மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்குமே என்று எண்ணி வருத்தம் கொள்வதா என்று தெரியவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.