திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்லும்போது போலீசார் மறித்ததால் விரக்தியடைந்த அடைந்த விவசாயி காய்கறிகளை கொட்டி கொந்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட எஸ்பி நேரில் சென்று விவசாயிக்கு ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரலவைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. விவசாயப் போக்குவரத்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் போக்குவரத்துக்கு தடையில்லை என்று முதல்வர் மற்றும் வேளாண் துறை செயலாளர் உணவுத்துறை செயலாளார்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், போலீசார் ஆங்காங்கே கெடுபிடி காட்டி வருகின்றனர்.
#அதிகாரிகளின் கெடுபிடி விரக்தியில் காய்கறிகளை ரோட்டில் வீசிய திருவள்ளூர் #விவசாயி...@PMOIndia@CMOTamilNadu
விவசாயிகளுக்கு எஞ்சியது வியர்வையும்... கண்ணீரும்தான்..!#CoronavirusLockdown#TamilNadulockdown pic.twitter.com/4rXJ0dBHsp
— தளபதி.கண்ணன் கோவில்பட்டி (@Thalapa72925105) April 15, 2020
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்திக். இவர் தனது நிலத்தில் பயிர் செய்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் மறித்து தடுத்து நிறுத்தியுள்ளார். அவரிடம் விவசாயி விளக்கமாகக் கூறியும் மேலும் செல்ல அனுமதிக்காததால் விரக்தியடைந்த விவசாயி தான் மூட்டையில் ஏற்றிச் சென்ற காய்ககறிகளை போலீசாரின் முன்பே சாலையில் கொட்டியுள்ளார். அப்போது அங்கே இருந்தவர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததும் அந்த விவசாயிக்காக நீதி கேட்டு பலரும் பகிர்ந்தனர். இதனால், அந்த வீடியோ வைரலானது.
காய்கறிகளை கொண்டு செல்ல போலீசார் விதித்த தடையில் விரக்தி அடைந்து காய்கறிகளை சாலையில் கொட்டிய விவசாயி....https://t.co/tApZDNraqg
செய்தி அறிந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. திரு. @aravindhanIPS உடனடி நடவடிக்கை https://t.co/wYEH8YBPbE pic.twitter.com/PpaEW2j1b9
— Raja Shanmugasundaram (@SRajaJourno) April 15, 2020
இந்த வீடியோ திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் பார்வைக்கு சென்றதையடுத்து, அவர் உடனடியாக விவசாயி கார்த்திக்கின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சாலையில் கொட்டப்பட்ட காய்கறிகளுக்கு இழப்பீடு தருவதாகக் கூறியுள்ளார். விவசாயி கார்த்திக் தனக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்ல அனுமதித்தாலே போதும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, விவசாயி கார்த்திக் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காத காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
விவசாயி கார்த்திக் தனது நிலத்தில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லும்போது, அரசின் உத்தரவை மீறி போலீசார் தடுத்து நிறுத்தியதால் விரக்தியடைந்து காய்கறிகளை சாலையில் கொட்டினார். இதையறிந்து மாவட்ட எஸ்.பி நேரில் சென்று ஆறுதல் கூறியதை பலரும் பாராட்டி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.