”நம் உடலை அப்படியே ஏற்க வேண்டும்”: முகத்தில் தாடியுடன் நம்பிக்கை கொடுக்கும் பெண்

முகத்தில் வளர்ந்துள்ள முடியை அப்படியே வளர்த்து, தன் உடலின் இயற்கை மாற்றங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பரப்பி வருகிறார்.

பிசிஓஎஸ் எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை சினைக்கட்டிகளால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள், முகத்தில் முடி வளருதல், உடல் பருமன், மாதவிடாய் ஒழுங்கின்மை, முகப்பரு, ஹார்மோன் சமமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவர்.

இதற்காக, சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் முகத்தில் வளரும் முடிகளை எடுத்துவிடுவர். இந்நிலையில் பிசிஓஎஸ்-ஸினால் பாதிக்கப்பட்ட நோவா கேலக்ஸியா 26 (Nova Galaxia), எனப்படும் பெண், தன் முகத்தில் வளர்ந்துள்ள முடியை அப்படியே வளர்த்து, தன் உடலின் இயற்கை மாற்றங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பரப்பி வருகிறார்.

2017லிருந்துதான் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். அதற்கு முன்பு வரை, எல்லோரையும் போலவே முகத்தில் வளரும் முடிகளை நீக்கிவிடுவதே இவருடைய வழக்கம்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் முடியை நீக்க வேண்டும். இப்போது, நான் தாடியுடன் நம்பிக்கையாகவே உணர்கிறேன்”, என தெரிவித்தார்.

இதுகுறித்த அவருடைய முகநூல் பதிவு இதோ:

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close