This Bihar teacher’s innovative way to teach English has Amitabh Bachchan and others impressed – ‘இப்படி ஒரு டீச்சர் கிடைச்சு இருந்தா நாமும் கலெக்டர் ஆகியிருப்போமோ’! – வைரல் வீடியோ
“நாம் ஒவ்வொரு வருடமும் பொறியியல் மாணவர்களை உருவாக்கி வருகிறோம். ஆனால், பொறியாளர்களை உருவாக்குவதில்லை” – வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் சமீபத்தில் வருத்தத்துடன் உதிர்த்த வார்த்தைகள் இவை.
இன்னமும் நம் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் வறுமையின் காரணமாகவோ, சூழ்நிலை காரணமாகவோ கல்வி கிடைக்காமல் இருக்கின்றனர். அப்படி கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தி படித்து முன்னேறியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
விளையாட்டுத்தனம், படிப்பில் நாட்டமின்மை, பெற்றோர்களின் கவனமின்மை உள்ளிட்ட பல விஷயங்கள் இதற்கு காரணமாக அமைகின்றன. நல்ல திறமையான ஆசிரியர்கள் கிடைக்காததும் ஒரு முக்கிய காரணமே.
ஆனால், காலம் கடந்த பிறகு தான் ‘அய்யயோ விட்டுட்டோமே’ என்றும் ஃபீல் பண்ணுகிறோம். ‘இவரைப் போல ஒரு ஆசிரியர் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நல்லா படிச்சு இருப்பேனே’ என்று சிலரை பார்க்கும் போது நமக்கு தோன்றும். அப்படி ஒரு ஆசிரியர் தான் தற்போது வைரலாகி வருகிறார்.
இவர் பாடம் நடத்தும் விதத்தைப் பார்த்து, பாலிவுட் பாஸ் அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அமிதாப்பின் பாராட்டுக்குப் பிறகு, அந்த வீடியோ செம வைரல்… பார்க்குறவங்க எல்லாம், ‘சே! இப்படி ஒரு டீச்சர் எனக்கு கிடைக்கலையே!’ என்று பதிவிட்டு வருகின்றனர்.