இதயத்தில் இடம் பிடித்த பாஸ்… லேட்டாக வருவேன் என்று கூறிய தொழிலாளிக்கு அவர் கூறிய பதில்!!!

இந்த காரணத்தை கேட்டால் எல்லா முதலாளிக்கும் கோபம் வரம் தான் செய்யும் என்று நினைப்பீர்கள்.

By: Updated: April 10, 2018, 02:30:13 PM

வேலைக்கு லேட்டாக வருவேன் என்று கூறிய தொழிலாளி ஒருவருக்கு, அவரின் பாஸ் கொடுத்த பதில் பலரின் இதயத்தையும் வென்றுள்ளது.

பொதுவாகவே நாம் வேலை செய்யும் இடங்களில் நமக்கு முதலாளியாக இருப்பவர்கள் எப்போதும் மிடுக்கான தோற்றத்துடனும்,  கம்பீரமான குரலிலும்  தான் பேசி பழகுவார்கள். சிலருக்கு அது அவர்களின் கவுரவத்தை காட்டுவதாக இருக்கலாம். சிலருக்கு தொழிலாளிகளுக்கு அதிகம் இடம் கொடுத்தால் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள் என்ற எண்ணமும் உண்டு.

ஆனால், சில முதலாளிகள் அப்படி இல்லை. தொழிலாளர்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் வேலையும் சரியாக நடக்கும் என்று நினைப்பார்கள்.  அந்த வகையில், ஒரு முதலாளி தனது  கம்பெனியில் வேலை புரியும் தொழிலாளி ஒருவருக்கு  அனுப்பிய பதில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஜென் என்பவர் தனது, முதலாளியிடம் இன்று தான் வேலைக்க்கு தாமதமாக வருவேன் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு, அவரின் பாஸ் “ எதாவது பிரச்சனையா, உன்னால்  நேரத்திற்கு வந்து விட முடியுமா” என்று பதில் அனுப்பி கேட்டுள்ளார்.

 

அதற்கு, ஜென்” வந்துவிடுவேன்,  என்னுடைய செல்லப்பிராணி மிகவும் அழகாக தூங்கிக் கொண்டிருக்கிறக்து. அதைப் பார்க்கும் போது எனக்கு என் செல்லத்துடன் ஃபோட்டோ எடுக்க வேண்டும் போ தோன்றுகிறது. அதற்கு சிறிது நேரம் எடுக்கும் முடிந்ததும் நான் வருகிறேன்” என்று ஃபோட்டோ உடன் தெரிவித்துள்ளார்.

இந்த காரணத்தை கேட்டால் எல்லா முதலாளிக்கும் கோபம் வரம் தான் செய்யும் என்று நினைப்பீர்கள். ஆனால், அதுதான் இல்லை.  ஜென்னின் காரணத்தைக் கேட்ட வரின் முதலாளி சொன்னது என்னவென்று தெரியுமா…

 

”சரி ஜென், எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்.  நீ திரும்பி வரும் போது உன்னுடைய ஃபோனில்  நீ எடுத்திருக்கும்  ஃபோட்டோக்களை காண நான் ஆவலாக காத்து இருக்கிறேன்.  அதே போல்  ஃபேஸ்பால் விளையாட்டை நேரில் காண என்னிடம் டிக்கெட் உள்ளது வேண்டுமென்றால் நீ உன் செல்லப் பிராணியை அழைத்துக் கொண்டு செல்கிறாயா? என்று கேட்டுள்ளார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:This boss reply to his employee who was late for work for first time is winning hearts online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X