ஒரு அளவுக்கு தான் நான் தூக்கி வைப்பேன் ; முடியலன்னா தொபுக்கடீர் தான் - வைரலாகும் வீடியோ..
Couple's viral video : சேர்களை ஒவ்வொன்றாக அடுக்க அடுக்க அதன் மீது மனைவியை உட்கார வைக்க கணவன் படும்பாடு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Couple's viral video : சேர்களை ஒவ்வொன்றாக அடுக்க அடுக்க அதன் மீது மனைவியை உட்கார வைக்க கணவன் படும்பாடு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சேர்களை ஒவ்வொன்றாக அடுக்க அடுக்க அதன் மீது மனைவியை உட்கார வைக்க கணவன் படும்பாடு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Advertisment
மியூசிக்கல் சேர் என்ற விளையாட்டை நான் முன்பு விளையாடியிருப்போம். இப்போது கூட, நண்பர்கள் ஓரிடத்தில் திரண்டுவிட்டால், அதுபோன்ற விளையாட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது. அதனால் ஏற்படும் கொண்டாட்டங்களுக்கும் அளவு இருக்காது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
சேரை சுற்றி ஓடி யார் முதலில் அமர்கின்றார்களோ அந்தநிலையிலான போட்டியை, சிறிது மாற்றி கணவன் - மனைவி இடையே விளையாடும் போட்டியாக நம்மவர்கள் மாற்றியமைத்துள்ளனர். அதாவது, சேர்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவது மட்டுமல்லாது, ஒவ்வொரு சேர் சேரும்போதும் அதில் தனது மனைவியை உட்காரவைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
சில எண்ணிக்கையிலான சேர்கள் இருக்கும்போது, மனைவியை, கணவன் எளிதாக உட்கார வைத்து விடுவார். சேர்களின் எண்ணிக்கை கூடக்கூட, மனைவியை அதில் உட்கார வைக்க கணவன் படும்பாடு சொல்லி மாளாது. ஆனால், இந்த காட்சியை, பார்வையாளர்களாக பார்க்கும் நமக்கு, அதனால் ஏற்படும் சந்தோஷம் கண்டு மாளாது...
ஓரளவிற்கு மேல் சேர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், மனைவியை சேரில் உட்காரவைக்க கணவர் மிகவும் கஷ்டப்படுவார். இந்த வீடியோவில், ஒரு கட்டத்துக்கும் மேல் முடியாத கணவன், மனைவியை கீழே போட்டு விடுகிறார். இந்த வீடியோ, நெட்டின்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.