எங்கப்பா இருக்கு இந்த ஆபிஸ்.. வேலை செய்பவர்கள் நன்கு தூங்கினால் ரூ. 41,000 போனஸ்!

ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்களில் இரவில் 6 மணி நேரம் முழுமையாகத் தூங்க வேண்டும்.

இரவில் 6 மணி நேரம் நன்கு தூங்கும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 41,000 ரூபாய் போனஸாக வழங்கப்படும் என்று ஜப்பான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தி வெளியான நாள் முதல் எந்த பக்கம் திரும்பினாலும் இதே பேச்சுத்தான்.

தூங்கினால் போனஸ்:

தூக்கம் முன் கண்களை தழுவட்டுமே…அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே.. கண்ணதாசனின் இந்த வரிகள் அப்போதைய இளைஞர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியவில்லை. ஆனால் இன்றைய உலகில் கட்டாயம் அனைவருக்கும் தேவையான ஒன்று தூக்கம் மட்டுமே.

இந்த கான்ஸ்ப்ட்டை நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருக்கும் ஜப்பான் நிறுவனம், தனது ஊழியர்களின் நலனுக்கான அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. சமீப காலமாக ஜப்பானில் தனியார் நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது,

இவர்களின் தற்கொலைக்கு அதிகப்படியான வேலைப்பளு மற்றும் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை காரணமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டன.

அதே போல் இளைஞர்களை அதிகளவில் கட்டிப்போட்டு வைத்திருக்கும் சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானவர்கள் இரவு நேரத்தை அதில் செலவிடுகின்றனர். இதனால் விளையும் தூக்கமின்மையால் அடுத்த நாள் காலையில் இவர்களால் அலுவலகத்தில் சரியாக வேலை செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது.

ஜப்பான் தூங்கினால்

இந்த அனைத்து காரணங்களையும் மனதில் கொண்டு, ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டர்நேஷனல் என்ற திருமண விழாக்களை நடத்தும் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.இதன்படி, ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்களில் இரவில் 6 மணி நேரம் முழுமையாகத் தூங்க வேண்டும்.

தற்காக தனியாக உருவாக்கப்பட்ட செயலி, ஊழியர்களின் தூங்கும் நேரத்தை கணக்கிடும். முழுமையாகத் தூங்குபவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். அதன் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் உணவகத்தில் ஆண்டுக்கு 41,000 ரூபாய்க்கு சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லது பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த பழக்கம் ஜப்பானில் மட்டுமில்லை இரவில் முழுமையாகத் தூங்கும் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியான நாள்முதல், நம்ம ஊர் இளைஞர்கள் வழக்கம் போல் தங்களின் மீம்ஸ்களால் இந்த நிறுவனத்தை புகழ்ந்தும், தங்களது அலுவலகத்தை சைடு கேப்பில் கலாய்த்தும் வருகின்றன.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: This japanese company pays more than rs 41000 a year to employees getting full nights sleep

Next Story
விரலை தத்ரூபமாக வெட்டி ஒட்டும் மாயாஜாலம்! சக்கைபோடு போடும் வீடியோ!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express