இறந்த தாத்தாவுக்கு 5 வயது சிறுமி அனுப்பிய நெகிழ்ச்சியான குறுஞ்செய்தி

அப்படித்தான், இறந்துபோன தன் தாத்தாவுக்கு 10 வயது சிறுமி அனுப்பிய குறுஞ்செய்தி படிப்போரின் மனதை அதிகமாக கனக்க வைத்துள்ளது.

கேலி, கிண்டல், மீம்ஸ், வீடியோஸ் என சமூக வலைத்தளங்கள் எப்போதுமே சிரிப்பை வரவழைக்கும் இடமாகவே பெரும்பாலும் உள்ளது. ஆனால், சில சமயங்களில் நாம் படிக்கும் பதிவுகள் சில நம் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும். அப்படித்தான், இறந்துபோன தன் தாத்தாவுக்கு 10 வயது சிறுமி அனுப்பிய குறுஞ்செய்தி படிப்போரின் மனதை கனக்க வைத்துள்ளது.

லண்டனில் வானொலி தொகுப்பாளரான ஜேம்ஸ் ஓ பிரையன், தன்னுடைய 10 வயது மகளுக்கு பழைய செல்போனை விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த செல்போனை ஜேம்ஸ் மீண்டும் பார்த்தபோது, அதில் அவரது மகள் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவருடைய தந்தைக்கு, அதாவது சிறுமியின் தாத்தாவுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளைக் கண்டார். அந்த குறுஞ்செய்திகள், சிறுமி தன் தாத்தாவின் மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார் என்பதையும், அவரது இழப்பால் வாடுவதையும் உணர்த்துவதாக அமைந்தது.

அந்த குறுஞ்செய்தியில், “தாத்தா, நான் உங்களை அன்பு செய்கிறேன். நீங்கள் சொர்க்கத்தில் நன்றாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஜீசஸை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கை அற்புதமாக இருக்கவில்லை”, என இருந்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close