வீடியோ : இந்த ஸ்வீட் கார்ன் கடைக்கு மட்டும் ஏன் இந்த மவுசு தெரியுமா? கஸ்டமர்ஸ் கூட்டம் அள்ளுது...

ஸ்வீட் கார்ன் விற்பனையாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்டைல் இருக்க வேண்டும் என்பது இந்த வியாபாரியின் வேற லெவல் யோசனை.

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதனை விரும்பி செய்ய வேண்டும் என்பது பழைய பொன்மொழி. ஆனால் எந்த தொழிலையும் வித்தியாசமாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதே இக்காலத்திற்கு ஏற்ற சொல்.

வித்தியாசமான ஸ்வீட் கார்ன் விற்பனை :

இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக விலங்குபவர் தான் கோயம்பத்தூர் வியாபாரி. இவர் கோயம்பத்தூரில் கார்ன் விற்பனை செய்து வருகிறார். ஸ்வீட் கார்ன் விற்பனை தற்போது எல்லா ஊர்களிலும் பிரபலமாகிவிட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கார்ன் கடையாவது நாம் பார்க்க முடிகிறது.

கோவையில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் இருக்கும் ஸ்வீட் கார்ன் கடைக்கு தனது வாடிக்கையாளர்களை வித்தியாசமாக கவர்ந்திழுக்கிறார் இந்த சுயதொழிலாளி. கார்னை மசாலா தூவி கிளரி கொடுக்கையில், இசையமைத்துகொண்டே மசாலா கிளருகிறார்.

இதற்காகவே இவர் அதிகமாக வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இவர் தயாரிக்கும் இந்த செய்முறை தற்போது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close