ஆப்டிகல் இல்யூஷன்’ குழப்பமானவை. அவற்றில் சில நமது மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன, சில ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
அதில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன்’ முக்கியமானது. ரஷ்ய கார்ட்டூனிஸ்ட் வாலண்டைன் டுபினின் வடிவமைத்த இந்த பார்வை சோதனை, உலக மக்கள் தொகையில் 1% மட்டுமே இரண்டு நிமிடங்களுக்குள் படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறது. பார்வை பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்!

ஒரு மனிதனின் முகம் தெரிகிறது இல்லையா? ஆனால், மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா? இல்லையென்றால், படத்தை தலைகீழாக திருப்பவும். மறைக்கப்பட்ட விலங்கை நீங்கள் இப்போது கண்டுபிடிக்க முடியும்.

இன்னும் பார்க்க முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம். அதை உங்களுக்காக நாங்கள் இங்கே வெளிப்படுத்துகிறோம்.
இந்த ஆப்டிகள் இல்யூஷனில் ஒரு நாய் ஒளிந்து கொண்டிருக்கிறது.
ரோமங்கள் அடர்த்தியான நாய் ஒன்று, நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு பெரிய எலும்பை வாயில் பிடித்திருக்கிறது. சாதரணமாக பார்க்கும்போது அது முகத்தின் மூக்காக தெரிகிறது. மனிதன் அணியும் தொப்பி நாய் உட்காரும் பாயாக இருக்கிறது. இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“