this optical illusion video’s will make you made, நம் கண்களை ஏமாற்றும் இந்த இரண்டு ஆப்டிகல் இல்யூஷன் வீடியோக்கள்தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த முதல் வீடியோதான் 2021-டில் சிறந்த ஆப்டிகல் இல்யூஷனுக்கான விருதை பெற்றுள்ளது.
முதல் வீடியோவை சாதாரணமாக பார்க்கும் போது ஒரு சதுர வடிவில் இருக்கும் சிறு அட்டை பெட்டி போல் தெரியும். ஆனால் இந்த வீடியோவின் இறுதியில் உங்கள் கண்களை ஏமாற்றும் வித்தை ஒன்றை அந்த நபர் காண்பிப்பார். இதற்கு ’ஊ லா லா பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதை ஆலிவர் மற்றும் சோல்ரிடன் என்பவர் இதை கண்பிடித்துள்ளனர். முதலில் சதுர அளவிலான பெட்டி போல் தெரியும், வீடியோவின் இறுதியில் பார்த்தால் இரண்டு சிகப்பு அட்டையை சாதுர்யமாக அவர் வைத்திருப்பார். ஆனால் நமது கண்களை எளிதில் ஏமாற்றிவிடுவார்.
அதுபோலவே இரண்டாவது வீடியோவில் ஒரு காகிதத்தால் செய்யப்பட்ட படிகட்டுகள் இருக்கும். முதலில் உள்ள படிகட்டில் ஒரு பொருளை அவர் வைப்பார். அந்த படிகட்டுகளை திருப்புவார். அப்போது முதல் படியில் இருந்த அந்த பொருள் கடைசி படிகட்டுகளுக்கு வருவதுபோல் தெரியும் . அதுபோல் அவர் தொடர்ந்து செய்வார். இறுதியாக அந்த வீடியோ முடியும் போது உங்களுக்கு ஒரு ஆர்ச்சரியம் காத்திருக்கும்.