Viral Video : நமக்கு பிடிக்காத ஒன்றை செய்ய சொல்லும் போது ஏற்படும் கோபத்திற்கு அளவே இருப்பதில்லை. இங்கேயும் இப்படி தான் ஒரு குட்டி சுட்டிக்கு தன்னுடைய முடியை வெட்டிக் கொள்வதில் விருப்பம் இல்லை. ஆனால் மூஞ்சியை கொஞ்சம் கோபத்துடன் வைத்துக் கொண்டு, மழலை மொழியில் முடி திருத்தம் செய்பவரை திட்டிக் கொண்டிருக்கிறார் இந்த சிறுவன்.
”அர்ர்ர்ரேரேரே என்ன செய்றீங்க… முடிய வெட்டாதீங்க… நாங்க உங்கள திருப்பி அடிப்பேன்… உங்க முடிய வெட்டிருவேன்… நான் ரொம்ப பெரிய பையன்னு” சொல்லும் போது அச்ச்ச்ச்சோ செம்ம க்யூட்ன்னு சொல்ல வைக்குது இந்த வீடியோ! நீங்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களின் கமெண்ட்டை கீழே பதிவு செய்யுங்கள்.
My baby Anushrut,
Every Parents is struggle pic.twitter.com/wN7B510ZwS— Anup (@Anup20992699) November 22, 2020
முடி திருத்தும் போது அவருடைய அப்பா அவரை மிகவும் பொறுமையாக சமாதானம் செய்ய முயலுகிறார். ஆனாலும் இந்த குட்டி குழந்தைக்கு கோபம் உச்சத்தில் இருந்து சற்றுமே குறையவில்லை. இந்த வீடியோவை பின்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய இப்போது வைரல் ஹிட்டாக உள்ளது இந்த வீடியோ.
Anushrut after haircut pic.twitter.com/Lt7QYhX0ku
— Anup (@Anup20992699) November 22, 2020
இந்த வீடியோவை இதுவரை 9 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த க்யூட்டான கோபம் இருக்குதே… அது அழகோ அழகு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil