New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/cat-baby-bath-demo.jpg)
நம்ம ஊரைப் போல் இதெல்லாம் பொம்பளைங்க சங்கதி என்று ஒதுங்கி நிற்காமல் அப்பா தன் மகனுக்கு குழந்தை வளர்ப்பைப் பற்றி போதிப்பது இன்னும் செம்ம செம்ம!
This video of a man using a cat to demonstrate how to bathe a baby is an internet hit : கைக்குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என்று பூனையை வைத்து ட்ரயல் காட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதலில் டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவின் அழகே அந்த பூனை மிகவும் சமத்தாக அமர்ந்த வண்ணம் கேமராவை பார்ப்பது தான்.
விரைவில் தாத்தாவாக போகும் வின் க்வாங் பாம் என்ற அவர் தன்னுடைய மகனுக்கு ஒரு குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என்று இந்த வீடியோ மூலம் விவரித்து வருகிறது மிகவும் அழகாக இருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பூனையை கண்டு தான் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த வீடியோ முடியும் வரை தன்னை வளர்ப்பவர் சொல்லும் அனைத்தையும் அமைதியாய் பொறுமையாய் கேட்டுக் கொண்டு இருக்கிறது. நம்ம ஊரைப் போல் இதெல்லாம் பொம்பளைங்க சங்கதி என்று ஒதுங்கி நிற்காமல் அப்பா தன் மகனுக்கு குழந்தை வளர்ப்பைப் பற்றி போதிப்பது இன்னும் செம்ம செம்ம!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.