கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான திட்டக்குடியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியது.
Advertisment
கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, இந்த வருட பருமழை திட்டக்குடிக்கு நல்ல மழை பொய்தது. வறட்சியாக கிடந்த ஆறுகள் தண்ணியால் நிரப்பப்பட்டன. திட்டக்குடி மையப்பகுதியில் இருக்கும் ஒரு ஆற்றில், டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இரண்டு வாகனங்கள் திட்டக்குடி தாலுகாவிலிருந்து கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டும் காட்சி, பார்பவர்களை அதிர்சிக்கு உள்ளாக்குகிறது.
Town Panchayat in Cuddalore district's Thittakudi taluk dumps garbage directly into water body. Two officials suspended after act was caught on camera. pic.twitter.com/jaOMjKNGkP
இதனைத் தொடர்ந்து, திட்டக்குடி தாலுக்காவின் நிர்வாக செயலாளர், துப்புரவு மேற்பார்வையாளர் ஆகியோரை கடலூர் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்துள்ளார். உடனடியாக இடைநீக்கம் செய்வதினால் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என்றும் மாவட்ட ஆட்சியர் நம்புகிறார்.
மாவட்டத்தில் குப்பைகளை திறம்பட சேகரிக்க, சேகரித்த குப்பைகளை வகைபடுத்தி பிரிக்க, பிரித்த குப்பைகளை மறுசுழற்சி செய்ய, மறுசுழற்சி செய்ய முடியாதவற்றை லேண்ட்பில் (landfill ) செயல்முறையின் மூலம் புதைத்தல் போன்ற செயல்முறைகளின் மூலம் ஆறு,ஏரி, கடல் மாசுபடுவதை நம்மால் தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.