பெரியாரிஸ்ட் மதிமாறன் தோசையை வைத்து ஜாதி பாடம் நடத்திய பேச்சு தான் இணயதளங்களில் இன்றைய வைரல். கல் தோசை, நெய் தோசை, வெங்காய தோசை, பேப்பர் தோசை என சாப்பிட்டு வந்தவர்களை தாழ்த்தப்பட்ட தோசை,பிராமணர் தோசை என பிரித்துக்காட்டிய அவரின் பேச்சு கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
”மெல்லிசான தோசையா? கல் தோசையா? என ஹோட்டல் ஊழியர் கேட்க, அதற்கு தோசையே வேண்டாம் சாமி பரோட்டா போதும்” என்று இளைஞர்கள் புலம்புவதாக நெட்டிசன்கள் வைரலாக்கி இருக்கும் மீம்ஸ்கள் இணையதளங்களில் அதகளப்படுத்தி வருகின்றன.
அது என்ன தோசையில் ஜாதி? என்று பெரியாரிஸ்ட் மதிமாறனின் பேச்சை இதுவரை கேட்காதவர்களுக்கு ஒரு சின்ன ரீகேப்.
சமீபத்தில் காரைக்குடியில் 'பகுத்தறிவாளர் கழகம்' நடத்திய கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளரும், பெரியாரிஸ்டுமான, தோழர் வே.மதிமாறன் கலந்துக் கொண்டு பேசினா. அப்போது அவர், ஆரியர்கள் தோசையை மெலிதாக நெய் ஊற்றி சாப்பிடுகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் கல் தோசை போல் ஊற்றி சாப்பிடுகின்றனர். இப்படி உண்ணும் தோசையில் கூட சாதி கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதோ அந்த வீடியோ
எதாவது ஹோட்டலுக்கு போய் ஆதிக்க சாதி #தோசை ஒன்னு, கீழ்சாதி ஊத்தாப்பம் ஒன்னுனு ஆர்டர் பன்னுடா மூதேவி
மாஸ்டர் சூடான கல்லுலு தண்ணிய ஊத்தி வெளக்கமாத்தால தேய்குறதுக்கு பதிலா உன் மூஞ்சிய வச்சு தேச்சிடுவாரு #தோசையில்_ஜாதி pic.twitter.com/d1crfZxXka
— Krish Venkat Ragavan (@KVRJI) 26 October 2018
அவரின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் வழக்கம் போல் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றன. நேற்று இரவு முதல் இதுக் குறித்த மீம்ஸ்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மீஸ்களின் சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக
#தோசை வாங்க #திராவிட_தோசை அலுவலகத்தை அணுகவும். ????#சாதிதோசை pic.twitter.com/JRH1bxRzbn
— ????❤ηαмø ηαgα❤???? (@Maxwellnaga3) 26 October 2018
கோபாலபுர வாசல்ல சோறு போடாம அனுப்பிட்டாங்க மை லார்ட் ????????????#தோசை #ஆதிக்கசாதி #திமுக #திராவிடதோசை #மதிகெட்டமதிமாறன் pic.twitter.com/cpPZt3PUIQ
— Tamizhan Memes22.2K (@TamizhanTrends) 27 October 2018
Tried my first #Meme with#Dosai #தோசை #தோசையில்_ஜாதி
Inimel dosai eat pannumpothu intha niyabagam thane varum.. pic.twitter.com/UY5uCEWPbF
— பாண்டியச்சோழன் (@PandiyaChozhan) 26 October 2018
நைஸ்ஸா,முருகலா,மெல்லிசா #தோசை சூட தெரிஞ்ச சாதியை ஒழிச்சிடலாம்- #மதிகெட்டமதிமாறன்
அப்ப நீ தோசை சுட்டு தான் சாதியை ஒழிக்க போற அப்படித்தானே-#மக்கள்
ஆமாம் ஆமாம் நான் #தோசை சுட்டு தான் சாதியை ஒழிக்க போறேன்????????#மதிகெட்டமதிமாறன் #திருட்டுதிராவிடம் #திராவிடதோசை pic.twitter.com/nPkKkyg3zG
— மழநாட்டுக்காரன்???????? (@VeeraTwitz) 26 October 2018
ஓ ஐ சி
அதான் செயலு எல்லாரும் கல்தோசை சாப்பிடும் போது அவர் ஆதிக்க சாதி வெறில இட்லி சாப்டுராரோ#தோசை #மதிகெட்டமதிமாறன் #தோசையில்_ஜாதி pic.twitter.com/G24yW9Nn1f
— குப்பத்து ராஜா (@Rraajaa777) 27 October 2018
ரெண்டு கரன்டி மாவெடுத்து, மெல்லிசாவும் இல்லாம மொத்தமாவும் இல்லாம பொதுவா ஒரு தோசைய ஊத்தி ????????#தோசை pic.twitter.com/K3lTCM2VFp
— Raviii (@ravikanna14) 26 October 2018
.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.