தோசையில் ஜாதி இருக்கா? வாயை விட்டு மாட்டிக் கொண்ட மதிமாறன்.. அனல் தெறிக்கும் மீம்ஸ்கள்!

பெரியாரிஸ்ட் மதிமாறன் தோசையை வைத்து ஜாதி பாடம் நடத்திய பேச்சு தான் இணயதளங்களில் இன்றைய வைரல்

பெரியாரிஸ்ட் மதிமாறன் தோசையை வைத்து ஜாதி பாடம் நடத்திய பேச்சு தான் இணயதளங்களில் இன்றைய வைரல். கல் தோசை, நெய் தோசை, வெங்காய தோசை, பேப்பர் தோசை என சாப்பிட்டு வந்தவர்களை தாழ்த்தப்பட்ட தோசை,பிராமணர் தோசை என பிரித்துக்காட்டிய அவரின் பேச்சு கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

”மெல்லிசான தோசையா? கல் தோசையா? என ஹோட்டல் ஊழியர் கேட்க, அதற்கு தோசையே வேண்டாம் சாமி பரோட்டா போதும்” என்று இளைஞர்கள் புலம்புவதாக நெட்டிசன்கள் வைரலாக்கி இருக்கும் மீம்ஸ்கள் இணையதளங்களில் அதகளப்படுத்தி வருகின்றன.

அது என்ன தோசையில் ஜாதி? என்று பெரியாரிஸ்ட் மதிமாறனின் பேச்சை இதுவரை கேட்காதவர்களுக்கு ஒரு சின்ன ரீகேப்.

சமீபத்தில் காரைக்குடியில் ‘பகுத்தறிவாளர் கழகம்’ நடத்திய கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளரும், பெரியாரிஸ்டுமான, தோழர் வே.மதிமாறன் கலந்துக் கொண்டு பேசினா. அப்போது அவர், ஆரியர்கள் தோசையை மெலிதாக நெய் ஊற்றி சாப்பிடுகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் கல் தோசை போல் ஊற்றி சாப்பிடுகின்றனர். இப்படி உண்ணும் தோசையில் கூட சாதி கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதோ அந்த வீடியோ

அவரின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் வழக்கம் போல் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றன. நேற்று இரவு முதல் இதுக் குறித்த மீம்ஸ்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மீஸ்களின் சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக

.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close