Advertisment

மருதமலை சாலையில் நின்ற 3 காட்டு யானைகள்; பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை ஊழியர்கள்: வைரல் வீடியோ

கோவை மருதமலை கோவிலுக்கு செல்லும் மலை சாலையில் நின்று கொண்டிருந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறை ஊழியர்கள் பட்டாசு வெடித்து விரட்ட முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
elephants in road

கோவை மருதமலை கோவிலுக்கு செல்லும் மலை சாலையில் நின்று கொண்டிருந்த மூன்று காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்ட முயன்ற வனத்துறை ஊழியர்கள்

கோவை மருதமலை கோவிலுக்கு செல்லும் மலை சாலையில் நின்று கொண்டிருந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறை ஊழியர்கள் பட்டாசு வெடித்து விரட்ட முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை மேற்கு தொடர்ச்சி மலையைப் பகுதிகளில் அமைந்து உள்ளது மருதமலை சுப்பிரமணி சாமி கோவில். முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். 

இங்கு வாகனங்கள் செல்லும் சாலை மற்றும் படிக்கட்டுகளில் நடந்து செல்லும் பாதை என இரண்டு பாதைகள் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி ஒற்றை யானை மற்றும் யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்து வனப் பகுதிகளுக்கு சென்று வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனது குட்டிகளை பாதுகாப்புடன் வனப்பகுதியில் அழைத்துச் சென்றது. 

மேலும் படிக்கட்டு பாதையில் ஒற்றைக் காட்டு யானை பல மணி நேரம் நின்றதால் நடந்து சென்ற பக்தர்கள் திரும்பி வீட்டுக்கு செல்ல கால தாமதம் ஏற்பட்டது. இதனால் மருதமலைக்கு செல்ல ஆறு மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதி கிடையாது என்றும் வனத் துறையினர் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை செய்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று மூன்று காட்டு யானைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்பொழுது யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரம் நின்றால் அவர்கள் பட்டாசுகளை பயன்படுத்தி விரட்ட முயன்றனர். அந்த செல்போன் காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

மேலும் வருகிற 28"ஆம் தேதி முதல் 30"ம் தேதி வரை ஆடி கிருத்திகை நடைபெற உள்ளதால் பொதுமக்களின் உயிருக்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வனப் பகுதிக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment