New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/05/oLSdOEB4FcSdrfFGK7Fx.jpg)
பென்ச் புலிகள் சரணாலய மீட்புக் குழுவினர் கிணற்றிலிருந்து புலியையும் காட்டுப்பன்றியையும் மீட்ட வீடியோ. Image from screengrab video of x/ @PenchMP
பென்ச் புலிகள் சரணாலய மீட்புக் குழுவினர் கிணற்றிலிருந்து புலியையும் காட்டுப்பன்றியையும் மீட்ட வீடியோ. Image from screengrab video of x/ @PenchMP
மத்தியப் பிரதேசத்தில் ஒரு கிணற்றில் விழுந்த புலியும் காட்டுப் பன்றியும் மேலே வரமுடியாமல் ஒன்றாக நீந்தி போராடிக்கொண்டிருப்பது குறித்து தகவல் அறிந்த பென்ச் புலிகள் சரணாலய மீட்புக் குழுவினர் கிணற்றிலிருந்து புலியையும் காட்டுப்பன்றியையும் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி் வருகிறது.
காடுகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வனவிலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பதோடு, வேறு ஏதேனும் ஆபத்துகளில் சிக்கிக்கொண்டாலும் வனத்துறையினர்தான் வனவிலங்குகளை மீட்டு பாதுகாக்கின்றனர்.
வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பலரும் காடுகளில் பதிவாகும் வனவிலங்குகளின் வீடியோக்களையும் வனத்துறையினரின் பணிகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், கிணற்றில் விழுந்த புலியையும் காட்டுப் பன்றியையும் வனத்துறையினர் போராடி மீட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை முதலில், மத்தியப் பிரதேச மாநிலம், சியோனியில் உள்ள பென்ச் புலிகள் சரணாலயம் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
A tiger and a boar ccidentally fell into a well in Pipariya village near the reaserve. Thanks to the swift action of the Pench Tiger Reserve rescue team, big cat and boar were safely rescued! With expert coordination & care, both animals were pulled out unharmed and released back pic.twitter.com/s8lRZH8mN5
— Pench Tiger Reserve (@PenchMP) February 4, 2025
இந்த வீடியோ குறித்து பென்ச் புலிகள் சரணலாய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “பிபாரியா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு புலியும் ஒரு பன்றியும் தற்செயலாக விழுந்தன. பென்ச் புலிகள் சரணாலய மீட்புக் குழுவின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி, பெரிய பூனை மற்றும் பன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டன! நிபுணர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கவனிப்புடன், இரண்டு விலங்குகளும் காயமின்றி வெளியே இழுக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், கிணற்றில் தவறி விழுண்ந ஒரு புலியும், ஒரு காட்டுப் பன்றியும் மேலே வர முடியாமல் கிணற்றில் சண்டையிடாமல் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கின்றன. மீட்புக் குழுவினர் ஒரு கட்டிலையும், ஒரு கூண்டையும் கிரேன் மூலம் கிணற்றுக்குள் கயிறு கட்டி மீட்க முயற்சி செய்கின்றனர். இதில் புலி கூண்டுக்குள் சென்றதும் அதன் கதவை மூடி கிரேன் மூலம் மேலே தூக்குகின்றனர். அதே போல, காட்டுப் பன்றியையும் கட்டிலில் மேலே தூக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
When a tiger and a boar fell into a well at Pench reserve. Both decided to stay calm and let rescuers do the job. Kudos to team @PenchMP pic.twitter.com/53hxMWTWC6
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 4, 2025
இந்த வீடியோவைப் பகிர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், “பென்ச் வனப்பகுதியில் ஒரு புலியும் ஒரு பன்றியும் கிணற்றில் விழுந்தபோது, இரண்டும் அமைதியாக இருக்கவும் மீட்புப் பணியாளர்கள் வேலையைச் செய்ய விடவும் முடிவு செய்தன. குழுவினருக்குப் பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மீட்புப் பணியின் வீடியோவைப் பார்த்த ஒரு எக்ஸ் சமூக வலைதளப் பயனர், “ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் கத்துகிறார்கள்! உண்மையில் யார் பொறுப்பு? எப்படியோ, அவங்க மீட்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி.” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “இது ஒவ்வொரு விஷயத்திலும் நம்பமுடியாதது. காட்டில் ஒருபோதும் 'சலிப்பூட்டும்' தருணம் இல்லை. மீட்புக் குழுவின் விரைவான சிந்தனை & சிறந்த குழுப்பணி” என்று பாராட்டியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.