கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவர் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா பகுதியை கடந்து சென்றுள்ளார்.
அப்போது "தாய் புலி தனது நான்கு குட்டிகளுடன்" சாலையை மெதுவாக பார்த்துவிட்டு ஓடிச் செல்லும் காட்சிகளை அவரது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்ட வனத்துறையினர்- மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும்- வனம் சார்ந்த அழகிய ரம்மியமான பாதையாக இருப்பதால் யானை, குரங்குகள், கரடி, அவ்வப்போது புலி என வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில்
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
அதே சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் எந்த வனவிலங்குகளை வாகனத்திலிருந்து இறங்கி பார்ப்பதோ - வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதோ அல்லது தூரமாக நிற்கும் வன விலங்குகளை பார்த்து புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை செய்து வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பான பயணங்களை வனவிலங்கு சாலையில் விழிப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கையாகவும் கோரிக்கையாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“