Viral Video: புலி பதுங்கித்தான் பாயும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், இந்த புலி பதுங்கி பாய்வதோடு மட்டுமில்லாமல், சிறுத்தை மரத்தில் ஏறினாலும் விடாமல் விரட்டி மரத்தில் ஏறுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனாலும், சிறுத்தை மிஸ் அகிடுச்சு நீங்களே பாருங்கள்.
காடுகள் செழிப்பாக இருக்கும் நாடு வளமாக இருக்கும். காடுகளே மழைபொழிவுக்கு காரணமாக அமைகின்றன. பூமியின் வெப்பத்தைக் குறைத்துப் பாதுகாக்கின்றன. பலரும் இத்தகைய வனங்களைக் காப்பது மனிதர்கள் என்று நினைத்தால், அது ஓரளவுதான் உண்மை. ஆனால், உண்மையில் வனங்கள் செழிப்பாக இருப்பதற்கு காரணம் வனவிலங்குகள்தான். குறிப்பாக, யானைகளும் புலிகளுமே வனங்களைப் பாதுகாப்பவை. ஒரு காட்டில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த காட்டின் வளமும் அமைகிறது.
புலிகள் இரையைக் குறிவைத்து பதுங்கிப் பாய்ந்து தாக்குவதில் திறமையானவை. புலிகள் பதுங்கிப் பாய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கே ஒரு புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி மரத்தில் ஏறும் வீடியோவைப் பாருங்கள்.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு புலி திடீரென பதுங்குகிறது. உடனடியாக மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்கிறது. எதிரே இருந்த சிறுத்தை பாய்ந்து வரும் புலியைப் பார்த்து உயிருக்கு பயந்து வேகமாக மரத்தில் ஏறி தப்பிக்கிறது. ஆனாலும், புலி விடாமல் அதே வேகத்தில் மரத்தில் ஏறுகிறது. புலி சிறுத்தையை வீழ்த்திவிடும் என்று நினைத்தால், அதனால், பாதி தூரம் வரை மட்டுமே ஏற முடிகிறது. சிறுத்தை மிஸ் ஆனதால், புலி மரத்தில் இருந்து மெல்ல கீழே இறங்குகிறது. புலி பாய்ந்து செல்கிற வேகத்தைப் போலவே, அதனிடம் இருந்து தப்பிச் சென்ற சிறுத்தை வேகமாக மரம் ஏறியது வியக்க வைக்கிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “இப்படித்தான் புலிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பரப்பில் சிறுத்தை உயிர் வாழ்கிறது
புலிகள் எளிதில் மரங்களில் ஏற முடியும், அவற்றின் கூர்மையான மற்றும் உள்ளிழுக்கும் நகங்கள் மரத்தின் தண்டுகளைப் பிடித்து மேலே ஏறுவதற்கு சக்திவாய்ந்த பிடியை வழங்குகிறது. ஆனால், வயதாகும்போது புலிகளின் உடல் எடையால் ஏற முடியாமல் தடையாக இருக்கிறது. அதனால், உயிர் வாழ ஒல்லியாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புலி பதுங்கி பாய்ந்து சிறுத்தையை விரட்டிச் சென்று மரத்தில் ஏறுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வேகமாக மரத்தில் ஏறும் புலியும் அதைவிட வேகமாக மரத்தில் ஏறி தப்பிச் செல்லும் சிறுத்தையும் வியக்க வைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“