Tiger chasing motorcyclist Wayanad Viral Video : வயநாட்டில் இருக்கும் மலைப்பகுதிகளில் நண்பர்கள் இருவர் வண்டியில் சென்று கொண்டிருந்த போது அவர்களை விரட்டிக் கொண்டு வந்தது புலி. இதனை பில்லியனில் அமர்ந்திருக்கும் நபர் வீடியோவாக எடுத்து வயநாடான் என்ற இன்ஸ்டாகிராம் பதிவில் ஷேர் செய்ய, சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது. வயநாட்டில் இருக்கும் புல்பல்லி, பத்தேரி ரோட்டில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றது.
வயநாடு மட்டுமின்றி, மேற்கு தொடர்ச்சி மலைகளில் பல்வேறு இடங்களில் புலிகள் சரணாலயம், காப்பகம் அமைந்துள்ளது. அடிக்கடி மக்கள் அந்த சாலைகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது பாதுகாப்புடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். நான்கு சக்கர வாகனங்கள் என்றால் ஒருவித பாதுகாப்பு இருக்கும். இரண்டு சக்கர வாகனம் என்பதால் நூலிழையில் அவர்கள் உயிர் தப்பினார்கள் என்று தான் கூற முடியும். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவான சில மணி நேரங்களிலேயே மக்கள் இந்த வீடியோவை அதிகம் பகிரத் துவங்கினர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Tiger chasing motorcyclist wayanad viral video