/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tiger-chasing-fail.jpg)
வைரல் வீடியோ
வைரல் வீடியோ
viral video: பொதுவாக புலிகள்தான் எல்லா விலங்குகளையும்விட வேகமாக பாய்ந்து ஓடி பிடித்து வேட்டையாடும். ஆனால், இங்கே ஒரு காட்டு எருமை புலிக்கு தண்ணி காட்டி தப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காடு ஏராளமான அதிசயங்களை தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கிறது. இயற்கையை நேசிப்பவர்கள், காடுகளை நேசிப்பவர்களால் மட்டுமே அந்த அதிசயங்களைக் காண முடியும்.
வலிமையானவைகள் ஜீவிக்கும் என்ற கோட்பாடுதான் காடுகளிலும் பொருந்திப் போகிற விதி. வேட்டை விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, கழுதைப்புலி போன்ற விலங்குகள் இரையை குறி வைத்து ஓடி சேசிங் செய்து பாய்ந்து பிடித்து வேட்டையாடுவதில் திறமையானவைகள். அதிலும் புலிகள், விலங்குகளை பதுங்கி இருந்து, பாய்ந்து சேசிங் செய்து பிடிப்பதில் திறமையானவை. ஆனால், அத்தகைய புலி சேசிங்கில் ஒரு காட்டு எருமையிடம் தோற்றுப்போன வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Survival in the wild is challenging for both the Prey and the Predator video- shared on SM pic.twitter.com/hRZnT4LA3S
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 2, 2023
காட்டில் ஒரு புலி காட்டு எருமை ஒன்றை சேசிங் செய்து பிடிக்க முடியாமல் தோற்றுப் போனது. புலிக்கு தண்ணி காட்டிய காட்டு எருமை தப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு புலி காட்டு எருதை மின்னல் வேகத்தில் விரட்டிச் செல்கிறது. ஆனால், காட்டு எருமை உயிர் பயத்தில் அதைவிட வேகமாக பாய்ந்து ஓடுகிறது. விடாமல் விரட்டிச் சென்ற புலி ஒரு ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் நின்றுவிடுகிறது.
வேட்டையாட விரட்டி வந்த புலிக்கே தண்ணி காட்டிவிட்டு தப்பிய காட்டு எருமை வீடியோ பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.