புலிகளை வைத்து ஒரு காட்டின் வளத்தையும் பரப்பையும் கூறிவிடலாம் என்பார்கள். ஏனென்றால், ஒரு காட்டில் புலி இருக்கிறது என்றால், அந்த காடு பெரிய பரப்பளவு கொண்ட காடாக இருக்க வேண்டும். அந்த புலிக்கு தேவையான இரையாக விலங்குகளும் இருக்க வேண்டும். புலிகள் இருக்கும் காடுகளில் வன அழிப்பு என்பது மிகவும் குறைவாகவெ இருக்கும்.
நமது நாட்டின் தேசிய விலங்கு புலி. இந்தியாவில் புலிகளைப் பாதுகாக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புலிகள் உள்ள காடுகளை சரணாலயங்களாக அறிவித்து கண்காணிக்கப்படுகின்றன.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்ஜய் குமார், தனது எக்ஸ் பக்கத்தில், புலி ஒன்று வெயிலுக்கு குட்டையில் நீரில் அமர்ந்து சில் பண்ணும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். புலி வெயில் தாங்காமல் வெப்பத்தைத் தணிக்க நீரில் அமர்ந்து சில் பண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்ஜய் குமார் குறிப்பிடுகையில், “சில நேரங்களில் புலி உங்கள் பொறுமையை சோதிக்கும். ஆண் புலி அனைத்து வாகனங்களும் நகர்ந்த பிறகு நீர்நிலைக்கு வந்து, சில் பண்ணிய பிறகு, ஜிப்சியை நெருங்கும் சத்தம் கேட்டு வெளியேறியது. நீங்கள் காத்திருந்து வாய்ப்புகளை பற்றிக்கொள்ள விரும்பினால் வெகுமதி அளிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், ஒரு புலி குட்டையில் உள்ள நீரில் அமர்ந்து வெப்பத்தைத் தணித்து சில் பண்ணுகிறது. பிறகு, வாகனங்களின் சத்தம் கேட்டு அங்கே இருந்து எழுந்து செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“