New Update
/indian-express-tamil/media/media_files/FUW6aesU0wzwajoeEPYs.jpg)
‘மான்கள் கத்தி அழைப்பதை மிமிக்ரி செய்யும் புலி’ (image screenshot: x/ @sandeepifs)
மான்கள் கத்துவதைக் கேட்கும் புலி, உடனே தானும் மான் போல கத்தி அழைக்கிறது. இந்த காட்சியைப் பார்க்கும் நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மிரண்டு போயிருக்கிறார்கள்.
‘மான்கள் கத்தி அழைப்பதை மிமிக்ரி செய்யும் புலி’ (image screenshot: x/ @sandeepifs)
உலகத்தில் வலிமை உள்ள உயிரினம் வாழும் என்ற கோட்பாடுப் படிதான் இயங்குகிறது. வனவிலங்குகளின் வாழ்க்கை விதி அப்படித்தான். ஆனால், மனிதர்களில் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான்.
காடுகளில் வேட்டையாடும் வனவிலங்குகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட எல்லையை வரையறை செய்வதில் ஒரு பெரும் போட்டியே நடக்கும். அதனால், வேட்டை வனவிலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு மோதல் நடக்கும்.
பொதுவாக வேட்டை வனவிலங்குகளான புலி, சிறுத்தை ஆகியவை இரையை வேட்டையாட பதுங்கிச் சென்று, மறைந்து சென்று திடீரென ஒரே பாய்ச்சலில் இரையின் மீது பாய்ந்து வீழ்த்தி வேட்டையாடும். வேட்டை வனவிலங்குகள் சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், நரி என ஒவ்வொன்றும் தனது இரையை வேட்டையாடுவதில் ஒவ்வொரு உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
Wow🥹🥹🥹
— Sandeep Tripathi, IFS (@sandeepifs) September 9, 2024
A tiger mimicking call of spotter deer !!! pic.twitter.com/PA9bBCxqLo
விலங்குகளில் நரிதான் மிகவும் தந்திரக்கார விலங்கு என்று நாம் கதைகளில் கேட்டிருப்போம், ஆனால், இந்த புலியைப் பாருங்கள், நரியை விஞ்சும் அளவுக்கு, காட்டில் மான் போல கத்தி மான்களை அழைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. தந்திரக்காரப் புலி ஒன்று, மான் கத்தி அழைப்பதைக் கேட்டு, மான் போல கத்தி தூரத்தில் இருக்கும் மான்களை அழைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘மான்கள் கத்தி அழைப்பதை மிமிக்ரி செய்யும் புலி’ என்று குறிப்பிட்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரி சந்தீப் திரிபாதி பகிர்ந்துள்ள வீடியோவில், காட்டில் ஒரு புலி இருக்கிறது, தூரத்தில் மான் கத்தும் சத்தம் கேட்கிறது. மான்கள் கத்துவதைக் கேட்கும் புலி, உடனே தானும் மான் போல கத்தி அழைக்கிறது. இந்த காட்சியைப் பார்க்கும் நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மிரண்டு போயிருக்கிறார்கள்.
மான்களை வேட்டையாட தூரத்தில் இருக்கும், மான்கள் கத்தி அழைப்பதைப் போல கத்தி அழைக்கும் இந்த தந்திரக்காரப் புலி பலே கில்லாடிதான்.
புலி மான் போல கத்தும் வீடியோவைப் பார்த்த எக்ஸ் பயன்ர் ஒருவர், “நம்பமுடியவில்லை” என்று வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.