viral video: ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், சுற்றுலாப் பயணிகளின் ஒரு ஜீப் சஃபாரி புலியை ஆபத்தான முறையில் மிக நெருக்கமாக நெருங்குகிறது. கோபமடைந்த புலி சுற்றுலாப் பயணிகளை நோக்கி உறுமும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகள் இருக்கும் பகுதிகள் மற்றும் தேசியப் பூங்காக்களில் அதிகரித்து வரும் சுற்றுலா, சுற்றுச்சூழலை சீர்குலைப்பதோடு, வன விலங்குகளுக்கும் இடையூறாக இருப்பதாக பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சஃபாரி ஜீப் ஓட்டுநர்கள் வன விலங்குகளுக்கு மிக அருகில் செல்லும்போது அவர்களின் கவனக்குறைவைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வெளியாகி வருகின்றன.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ, ஜீப் சஃபாரி புலிக்கு அருகே ஆபத்தான முறையில் மிக நெருக்கமாக நெருங்கி வருவதைக் காட்டுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், அந்த வாகனம் புலிக்கு மிக அருகில் நெருத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அந்த ஜீப்பை நோக்கி புலி கோபமாக உறுமுகிறது. வாகனத்தை நோக்கிச் சென்ற புலியை விரட்டுமாறு ஓட்டுநர் சத்தம் போடுகிறார். அப்போது, வாகனத்தில் இருக்கும் ஒரு பெண் பீதியடைந்து, டிரைவரிடம் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்தச் சொல்வது பின்னணியில் கேட்கிறது. வாகனம் பின்னோக்கி சென்றபின், புலி மீண்டும் காட்டுக்குள் செல்கிறது. “எல்லா நேரமும் மக்கள் தங்கள் உரிமை என்று உங்கள் வீட்டிற்குள் என்ன நீங்கள் என்ன செய்வீர்கள்? அதே போலத்தான், புலி எரிச்சல் அடைகிறது.” சுசந்தா நந்தா ட்வீட் செய்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஒரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவிக்கையில், “வனவிலங்கு சரணாலயங்கள் வழியாக நுழைவதற்கு / கடப்பதற்கு சிறப்பு கட்டணம் வசூலிக்க வேண்டும். இது குறைந்தபட்சம் பலர் அவ்வழியே செல்வதை ஊக்கமிழக்கச் செய்யும். காடுகளின் வழியாக சாலைகள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதைப் போல, மோசமான நிலையில் உள்ள வனவிலங்குகள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்பதும் பிரச்சினையாகும்” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“காடுகளிலோ அல்லது காடுகளுக்கு வெளியிலோ விலங்குகளை நாம் வாழ அனுமதிக்காதது துரதிர்ஷ்டவசமானது” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
“புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இந்த சஃபாரிகளே முக்கிய காரணம். வனவிலங்குகளுக்கு எதிராக இருக்கும் உள்ளூர் மக்களுக்கு அவர்கள் வேலை கொடுக்கிறார்கள். மேலும், பல நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுகிறது. இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் பூங்காக்களில் புலிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன” என்று மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“