Advertisment

புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ

Tiger Safari viral Video human Wild life Conflict : தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை பொது மக்கள் வழங்கவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாய் உள்ளது

author-image
WebDesk
New Update
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ

வனவிலங்குகளை அவை வாழும் இடத்திலேயே காணுவது ஒரு சாகசமாகவே கருதப்படுகிறது. வனவிலங்குகளை நேரில் காணும் டைகர் சபாரி சாகசகமாய் இருந்தாலும், அதில் எண்ணற்ற அபாயங்கள் இருப்பதை உணர் வேண்டும்.

Advertisment

டைகர் சபாரி மேற்கொண்ட ஒரு குழு, புலி இருந்த இடத்திற்கு அருகே நின்று கொண்டு செல்பி எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டர் கணக்கில் ஒரு விடியோவை பதிவிட்டார்.

" மூளை இல்லாதவர்கள். மனித மூளை வேலை செய்யாத போது, வாய்  தொடர்ந்து அனத்திக் கொண்டிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தும் இந்த புலியின் திறனை பாராட்டுகிறேன். ஆனால், எப்போதும் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது" என்று பதிவிட்டார்.

வாகனத்தை விட்டு இவர்கள் எப்படி இறங்கினார்கள்,    புலி நடமாடும் இடத்திற்கு அருகே  வாகனத்தை நிறுத்தியது யார்? ஓட்டுனர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எடுக்கப்படவேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இது மிகவும் மோசமான சம்பவம். வாகனத்தில் உள்ளவர்களும், செல்போனில் புலியை படம் எடுத்தவரும் உயிர் தப்பியது ஒரு அரிதான சம்பவம் என வனவிலங்கு ஆய்வளார்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சபாரியை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை பொது மக்கள் வழங்கவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment