ஒரு மீனவர் கயாக் வகை படகில் நடுக்கடலுக்கு சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென வரிப்புலி சுறா ஒன்று தாக்கி படகைக் கடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடலில் சாகசப் பயணம் மேற்கொள்வது ஒரு உற்சாகமான அனுபவமாக இருக்கும். இருப்பினும், சுறா போன்ற ஆபத்தான உயிரினங்களை கடலில் சந்திக்கும் போது பெரும் பீதியைக் கிளப்பும். வரிப்புலி சுறா கயாக் வகை படகை கடுமையாக தாக்கும் வீடியோவைப் பார்க்கும் போது சிலிர்க்க வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
யூடியூப்பில் ஹவாய் அருகே மீன்பிடிக்கும்போது எடுத்த வீடியோவில், நடுக் கடலில் ஒரு கயாக் வகை படகு அசையாமல் நகர்கிறது. திடீரென்று, எங்கிருந்தோ, முன்னால் ஒரு பெரிய சுறா வேகமாக வருகிறது. அது கயாக் மீது கடுமையான தாக்குதலை நடத்தி விட்டு நகர்கிறது. வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஸ்லோ-மோஷன் வீடியோவில் மீனவர் தனது காலால் சுறா மீனை உதைத்து தள்ளுகிறார். வரிப்புலி சுறா தாக்குதலின் போது சுறா சத்தமாக கத்துகிறது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஓஹு தீவில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. அந்த நபர் யூடியூப் வீடியோ குறித்து குறிப்பிட்டிருப்பதாவது: “மே 12, 2023 அன்று நண்பகல். ஓஹூவின் காற்றோட்டப் பக்கம். 55 அடி ஆழம், கரையிலிருந்து 2 மைல்களுக்கும் குறைவானது. ‘ஹூஷ்’ சத்தம் கேட்டு, மேலே பார்த்தபோது, கயாக்கின் பக்கத்தில் ஒரு பரந்த பழுப்பு நிற உருவம் தெரிந்தது. முதலில் ஆமை என்று நினைத்தேன். இந்த சம்பவம் மிக வேகமாக நடந்துவிட்டது. நான் தாக்குதலில் இருந்து தடுப்பதற்கு என் இடது பாதத்தை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தேன். உண்மையில் சுறா தலையை உதைத்து தள்ளினேன் என்பது எனக்கு புரியவில்லை. சுறா இல்லாமல் கூட அதை மீண்டும் செய்யும்படி நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு அந்த நெகிழ்வுத்தன்மை இருக்காது என்று நினைக்கிறேன். நான் வீட்டில் வீடியோவைப் பார்க்கும் வரை சுறா கயாக்கை மோதியதாக மட்டுமே நான் நினைத்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடலில் வரிப்புலி சுறா படகைத் தாக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பீதியடைந்துள்ளனர். ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “எவ்வளவு வேகமாக அந்த தாக்குதல் தொடங்கப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பீதியைத் தவிர வேறு ஒன்றும் செய்ய நேரமில்லை. நீங்கள் நன்றாக இருந்ததில் மகிழ்ச்சி சகோ,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “அது பைத்தியம் பிடித்த மாதிரி தாக்குகிறது! நீங்கள் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்
மூன்றாவது பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “மக்கள் எப்படி கயாக் படகில் மீன்பிடிக்கிறார்கள், புகழ்ச்சியில் விழாமல் நிற்கிறார்கள். நண்பா ஒரு சுறாவினால் தாக்கப்பட்டாலும் அதை உதைக்கிறார், பைத்தியக்காரத் தனமான மரியாதை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“