பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், பாம்பைக் கண்டு பாயும் புலி நடுங்குமா? என்ற கேள்வி எழுந்தால் பாம்பைக் கண்ட புலி என்ன செய்கிறது என்று இந்த வரைல் வீடியோவைப் பாருங்கள்.
வனத்தில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் மனிதர்களுக்கு அதிசயமானதுதான். எப்போது பார்த்தாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வன விலங்குகளின் வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் பாம்பு, புலி, சிங்கம், யானை போன்ற விலங்குகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உள்ளது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற சொலவடை உண்டு. பாம்பு என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. பாம்பைக் கண்டு படை நடுங்கலாம். ஆனால், பாயும் புலி நடுங்குமா? என்று கேள்வி எழுந்தால் அதற்கு விடையளிக்கும் விதமாக வனத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பாம்பைக் கண்ட புலி என்ன செய்கிறது என்பதைக் காட்டும் வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை அதிகாரி சுஸந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், வனத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பு பாதையில் வழி மறிது படுத்து கிடக்கிறது. அந்த வழியாக சென்ற புலி, மலைப் பாம்பைப் பார்த்து மிரண்டு நிற்கிறது. நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பு லேசாக சீறியதும் பின் வாங்கிய புலிசிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு மலைப்பாம்பை சுற்றியபடி சென்று அந்தப் பக்கம் செல்கிறது. பாம்பைக் கண்டு புலி நடுங்க வில்லை என்றாலும் கொஞ்சம் மிரண்டது நன்றாகவே தெரிகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஸந்தா நந்தா, புலி மலைப்பாம்புக்கு வழிவிட்டது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"