காடு பல அதிசயங்களை ஒலித்து வைத்திருக்கிறது. ஆனால், மனிதர்கள் காடுகளை அழிப்பதன் மூலம் அதிசயங்களை அழித்து வருகிறார்கள். காடுகளைப் பாதுகாக்க வேண்டுமானால், வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும். வனவிலங்குகளையும் காடுகளையும் பாதுகாப்பது என்பது வனத்துறையினர் மேற்கொள்ளும் கடினமான பணி.
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டுமானால், அதற்கு மக்களிடையே வனங்களைப் பற்றியும் வனவிலங்குகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், சமூக ஊடகங்கள் வழியாக் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வனவிலங்குகள் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி, சஞ்ஜய் குமார் ஐ.ஏ.எஸ் கிஷான்பூர் வனப்பகுதியில், ஏரிக்கரையோரம் புலி ஒன்று நடந்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புலி நமது நாட்டின் தேசிய விலங்கு, அரசு மற்றும் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், அவற்றை பாதுகாப்பது என்பது அதைவிட முக்கியமான பணி.
Tigers can travel over 20 km overnight, patrolling their territory and marking at prominent spots to send message to intruders or competitors. Here is a female walking along jhaddi lake spotted early in the morning in Kishanpur WLS. @ntca_india @uptourismgov @rameshpandeyifs pic.twitter.com/q7x7VEcMtG
— Sanjay Kumar IAS (@skumarias02) September 9, 2024
இந்த வீடியோவில், கிஷான்பூர் வனப்பகுதியில், காலை நேரத்தில் ஏரிக்கரையோரம் ஒரு பெண் புலி நடந்து செல்கிறது. இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சஞ்ஜய் குமார் ஐ.ஏ.எஸ் குறிப்பிடுகையில், “புலிகள் ஒரே இரவில் 20 கி.மீ.க்கு மேல் பயணித்து, தங்கள் எல்லைக்குள் ரோந்து செல்லும், ஊடுருவும் நபர்களுக்கு அல்லது போட்டி விலங்குகளுக்கு செய்தி அனுப்ப முக்கிய இடங்களில் குறியிடும். கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் அதிகாலையில் ஒரு பெண் புலி ஏரி வழியாக நடந்து செல்வதைப் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், புலியின் நடை, புலியின் கம்பீரம் ஆகியவற்றைப் பார்த்து வியப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள், புலி எவ்வளவு அழகாக காலையில் ஏரிக்கரையோரம் நடந்து செல்கிறது பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.