viral video: வனவிலங்குகள் உலவும் காட்டுப் பகுதி வழியாக செல்லும் சாலையில், நள்ளிரவில் புலிகள் அடுத்தடுத்து சாலையைக் கடந்து கொண்டிருந்த போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது. என்ன ஆகப்போகிறதோ என்று எல்லோருடைய மனதையும் பதறச் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வன விலங்குகள் பற்றிய புரிதல் மெதுவாகத்தான் அதிகரித்துள்ளது. ஆனால், முழுமையான புரிதலும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே கூறுகிறார்கள். அரசுகளேகூட, வனவிலங்குகள் இருக்கும் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துவதும் போக்குவரத்தை அதிகரிப்பது வனவிலங்குகளை தொந்தரவு செய்வதாகவும் அதை இருப்பிடத்தில் இருந்து விரட்டுவதாகவும் உள்ளது.
அதனால், மனிதர்கள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். வன விலங்குகள் வாழும் வனப்பகுதி வழியாக வாகனங்களில் செல்லும்போது மெதுவாக செல்ல வேண்டும். ஏனென்றால், வனவிலங்குகள் சாலையைக் கடக்கலாம்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, வனப்பகுதியாக செல்லும் சாலையில் நள்ளிரவு நேரத்தில் புலிகள் அடுத்தடுத்து சாலையைக் கடக்கும்போது, ஒரு வாகனம் வேகமாக வருகிறது. புலிகள் சிக்கிக்கொள்ளுமோ என்று பார்ப்பவர்களை பதறச் செய்யும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் வழியாக செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், வாகனத்தை மெதுவாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோவில், வனவிலங்குகள் வாழும் வனப்பகுதியில் செல்லும் சாலையில், நள்ளிரவு நேரத்தில் புலிகள் அடுத்தடுத்து சாலைகளைக் கடக்கிறது. அப்போது, துரத்தில் ஒரு வாகனத்தின் வெளிச்சம் வருகிறது. 2 புலிகள் கடந்துவிடுகிறது. 3வது புலி கடக்கும்போது வாகனம் நெருங்கி வந்துவிடுகிறது. 4வது புலி கடக்கும்போது வாகனம் இன்னும் நெருங்கி வந்துவிடுகிறது. புலிகள் வாகனத்தில் சிக்கிக்கொள்ளப்போகிறதோ என்று வீடியோவைப் பார்ப்பவர்களின் மனம் பதறும்போது அந்த வாகனம் வேகம் குறைந்து மெதுவாக வருகிறது. புலிகள் சாலையைக் கடந்துவிடுகிறது. இந்த த்ரில்லிங் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதனால்தான், வனவிலங்குகள் வாழும் பகுதியில் வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"