சிங்கம், புலி போன்ற வேட்டை விலங்குகள் இரையை வேட்டையாடுவதைவிட வேட்டை விலங்குகளுக்கு இடையே நடக்கிற சண்டைகள் மிகவும் பயங்கரமானவையாக இருக்கும். அப்படி, 2 புலிகளுக்கு இடையே நடந்த பயங்கர சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வேட்டை வனவிலங்குகளான சிங்கம், புலி போன்ற விலங்குகள் வனப்பகுதிகளில் தங்களின் அதிகார எல்லையை வரையறுக்கின்றன. வனப்பகுதிகளில் அதிகாரம் யாருக்கு என்பது பற்றி போட்டி எழும்போது, சிங்கம், புலி போன்ற விலங்குகள் அவைகளுக்குள்ளாகவே பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்ளும்.
வனப்பகுதியில் சுற்றித் திரியும் புலிகள், சிறுநீர் கழித்து தங்களின் அதிகார எல்லைகளை உறுதி செய்யும். அதே பகுதியில் மற்றொரு புலி போட்டிக்கு வரும்போது இரண்டு புலிகளுக்கு இடையே சண்டை நடைபெறுவது வழக்கம். புலிகளில் ஆண் புலி, பெண் புலி என்பதெல்லாம் கிடையாது. வெற்றி பெறுபவர்களுக்கு வனப்பகுதியின் அதிகாரம் தோல்வியடைபவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி வனத்தில் இன்னொரு இடத்தை தேடிச் செல்லவேண்டும். அப்படி, 2 புலிகள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், இரண்டு புலிகள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். பெரிய உறுமல் சத்தத்துடன் புலிகள் கட்டிப் புரண்டு கடித்து சண்டையிடும் காட்சி பார்ப்பதற்கு திகிலூட்டும்படியாக இருக்கிறது.
இந்த வீடியோ குறித்து வனத்துறை அதிகாரி சுதா ராமன் குறிப்பிடுகையில், “புலிகள் சண்டையிடுவதை எப்போதாவது பார்த்தால், அது மல்யுத்தத்தைப் போல இருக்கும். இத்தகைய சண்டைகள் மூலம்தான் ஆதிக்கம் நிலைநாட்டப்படும். வெற்றியாளர் வனப் பிரதேசத்தை வெல்லும். அதிர்ஷ்டசாலி என்றால் பெண் புலியாக இருந்தாலும்கூட அதற்கு வனப்பகுதியின் அதிகாரம் கிடைக்கும். தோல்வியடைந்த புலி அந்த இடத்தில் இருந்து வெளியேறி காட்டில் புதிய பகுதியைக் கண்டுபிடிக்க அலைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"