காடு தனக்குள்ளே அற்புதங்களையும் அதிசயங்களையும் மர்மங்களையும் மறைத்து வைத்திருக்கிறது. இயற்கையின் பேரழகு, காடுகளிலும் மலைகளிலும் ஆறுகளிலும்தான் தவழ்கிறது. அதனால்தான், இயற்கையை நேசிக்கும் மனிதர்கள் காடுகளைத் தொந்தரவு செய்யாத அளவில் காடுகளுக்கு பயணம் செய்வது.
காடுகளில் உள்ள வனவிலங்குகளும் பறவைகளும் மனிதர்களுக்கு இன்னும் ஈர்ப்பு மிக்கதாக உள்ளது. காடு என்பது ஒரு பச்சை மர்மம், காடு இயற்கையின் சட்டத்தை போதிக்கும் இடம். ஆனால், காடுகளும் மலைகளும் சமவெளி மனிதர்களின் நடத்தையால் பாதிக்கப்படுகிறது. காடுகளை புரிந்துகொள்ள தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் காட்டுக்கு என்று ஒரு மொழி உள்ளது. அது காட்டின் ஓசை. அந்த காட்டின் ஓசையை கேட்டிருக்கிறீர்களா? காட்டின் ஓசையைக் கேட்டீர்கள் என்றால் இயற்கையை, காடுகளை, வனவிலங்குகளைப் புரிந்துகொள்வீர்கள். காட்டி ஓசை எவ்வளவு இனிமையாக இருக்கிறது பாருங்கள்.
காடுட்டின் ஓசையை காடுகளில் கம்பீரமாக வலம் வரும் புலிகளும் கேட்கின்றன. நீங்களும் காட்டின் இனிமையான ஓசையைக் கேளுங்கள். அதன் இனிமையில், மனதைப் பரிகொடுப்பீர்கள். காடுகளை நேசிப்பீர்கள்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், காடுகளில் பறவைகளின் கீச்சுகள், தூரத்தில் குயிலோசை ஒலிக்க, புலிகள் ஓய்வாக அமர்ந்து காட்டின் ஓசையைக் கேட்கின்றன. இந்த வீடியோ காட்டின் இனிமையான ஓசையை புலிகளுடன் சேர்ந்து நம்மையும் கேட்கத் தூண்டுகின்றன.
காட்டில் பறவைகளின் சலம்பல், கீச்சுகள், தூரத்தில் ஒலிக்கும் குயிலோசை, அதைக் ஓய்வாக கேட்கும் புலிகள் என மனதை மயக்கும் வீடியோவில் காட்டின் ஓசையை ஒருமுறை கண்களை மூடி கேட்டுப் பாருங்கள். பிறகு, கேட்டுக்கொண்டே இருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"